பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு. ஆடுதுறை மாசாத்தனுர்

ஆடுதுறை என்ற பெயருடைய ஊர்கள் தமிழகத்தில் .பல உள்ளன; அவற்றுள் காவிரியின் தென்பால் உள்ள ஆடுதுறை, தென்குரங்காடுதுறை எனவும், அவ் யாற்றின் வடகரைக்கண் உளது வடகுரங்காடுதுறை எனவும், வெள் ளாற்றின் கரைக்கண் உள்ள ஆவடுதுறை, ஆடுதுறை என -வும் வழங்கப்பெறும். ஆவடுதுறை என இருத்தற்குரியதே ஆடுதுறை எனப் பிறழவந்துளது. திருவாவடுதுறைக், குச் சாத்தனூர் என்பது பழம்பெயர் எனக் கல்வெட்டுக் களும், திருத்தொண்டர் புராணமும் கூறுகின்றன : சாத்த அார் என்பது ஊர்ப்பெயர் ஆவடுதுறை என்பது அவ் ஆர்க் கோயிலுக்குப் பெடர் நாளடைவில் சாத்தனூர் என்பது மறைந்துபோக, கோயிற் பெயரே, ஊர்க்கும் பெயராகிவிட்டது என ஆராய்ச்சியாளர் கூறுவர்.

சாத்தனர் என்பது, ஐயருைடைய திருப்பெயர்; தெய்வப் பெயரை மக்கட்கிட்டு வழங்கும் மரபு அன்றே இருந்ததாக்லின், அக் கடவுட் பெயர், இவருக்கும் பெய ராயிற்று ஆடுதுறை மாசாத்தனர், பெரும்புலவனும், ஆலத்துார் கிழார் முதலாகப் பன்னிரு புலவர் பெருமக்க னால் பாராட்டப் பெற்றேனும் ஆய குளமுற்றத்துத் துஞ் சிய கிள்ளிவளவனேப் பாராட்டியுள்ளார். அவன் இறக் தான்் எனக் கேட்டு அழுது பாடியவருள் நம் புலவரும் ஒருவராவர். இவர் பாடியனவாக நமக்குக் கிடைத்தது அக் கையறுகிலேச் செய்யுள் ஒன்றே. .

கிள்ளிவளவன் போர்வெறி கொண்டவன்; களத்தே அவ்ல்ை அழிவுற்ற உயிர்கள் அளவிறந்தனவாம்; அவன் இறந்த பின்னர், அவ்வளவு பெரும் உயிர்களை அழிக்க வல்லார் உலகத்து இலராயினர்; கிள்ளிவளவனின் இவ் வாற்றலே கினேந்து வருந்திய புலவர், அவனேக் கொன்று ர்ேத்த கூற்றுவன், அறிவற்றவனவன் என்று கூறுகிறர். உயிர்களைக் கொன்று உண்ணும் தொழில் உடையான் அக் கூற்றுவன்; அவன் பசிதிரப் பல உயிர்களைக் கொன்று