பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. ஆலங்குடி வங்கனுர்

ஆலங்குடி என்னும் பெயருடைய ஊர்கள், தமிழ் நாட்டில் பல உள்ளன. ஆதலின், வங்களுர் பிறந்த ஆலங் குடி யாண்டுளது என்பதைத் துணிதற்கில்லே. இவர், ம்றங்கெழு சோழர் உறந்தை அவையத்து அறங்கெட அறியாது' (நற்: ச00) எனச் சோழருடைய உறையூரை -யும், அவ்வூரிலுள்ள அறங்கூர் அவையினேயும் சிறப்பித் துள்ளாராதலின் இவர் சோழநாட்டு ஆலங்குடியினராவர் என்பர் சிலர்: "ஒளிறுவாள் தான்ேக் கொற்றச் செழியன், வெளிறில் கற்பின் மண்டமர் அடுதொறும், களிறுபெறு வல்சிப் பாணன் எறியும் தண்ணுமை" (அகம் : கoசு) எனப் பாண்டியன் பேராண்மையினேயும், அவன் பரிச :ளிக்கும் பெருமையினேயும் பாராட்டியுள்ளமையால், வங்க ர்ை பிறந்த ஆலங்குடி பாண்டிகாட்டு ஆலங்குடியே என்பர் வேறு சிலர். இவர் பாடிய அகத்துறைப் பாடல்கள் அனேத்தும், மருதத்திணையினேயே சார்ந்து இருப்பதால் இவர் மருதநிலத்தைச் சேர்ந்தவராவர் என்பாரும் உளர் : வங்கம் என்ற சொல், கப்பல் என்னும் பொருளுடைய தாம்; ஆதலின், வங்கன் என்பார், கடல் வாணிபம் மேற் கொண்ட கப்பல் வணிகராவர் ; இதனுல் இவர் நெய்தல்

கிலத்தவராவர் என்று கூறுவோரும் உளர்.

கணவன் நாடுகாவல் கருதி வேற்றுார் சென்றிருந்தக் கால், தனித்திருக்கும் தன் மனேநோக்கி விருந்தினர் வரக் கண்டு, அவரும் இல்லா இன்று, பகல் போய் இரவுவங் துற்ற இந்நேரத்தில் வந்த இவரை எவ்வாறு ஏற்றுப் போற்றுவேன், எனக் கலங்கிய உள்ளமுடையளாயினும், அதை அறியக்காட்டாது அடக்கி, அவரை இன்முகம் காட்டி வரவேற்று, "பாண விட்டில் முன்பக்கத்தேயுள்ள சாடியின் அடியில் உள்ளநீர் சிறிதே ஆயினும், அது கலங் குதலின்றித் தெளிந்தே உளது; பொழுது கழிந்து இரவு வந்துற்ற இப்போது புருவும், இதலும் போன்ற பறவை கள் வெளிவரா ஆதலின், அவற்றைக் கண்ணி அமைத்துத் திண் தெளித்துப் பிடித்துச் சமைத்து அளித்தல் ஆகாது