பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

lു

தேனினும் இனிய செழுந்தமிழ்ப் பாக்களால் மொழியையும் காட்டையும் வளம்படுத்தியவர், பழங் காலச் சங்கப்புலமை கல்லோராவர். அவர்கள் பிறக் தும் இருந்தும்வந்த ஊர்கள் பல்லனவாகும். அவர்களுட் சிலர் தம் பெயர்களோடு சார ஊர்ப்பெயர்களைச் சூட்டி யும், சூட்டுவித்தும் திகழ்ந்தனர். இவர்களே மாநகர்ப் புலவர்கள்' என்று தொகுத்து வெளியிட்டுள்ளோம். இப் புலவர் பெருமக்கள், பொன்ருப் புகழ்பெற்ருே ராவர். - - - -

இவர்தம் வரலாறுகள், சிந்தைக்கினிய செவிக் கினிய வாய்க்கினியவாய்ச் சிறந்தனவாகும். இவ்வருமை பெருமை மிக்க வரலாற்றுண்மைகளை அவர்தம் பாவின் அகச் சான்றுகொண்டே ஆய்ந்தெழுதிய நூல்கள் இவையாகும். இம் முப்பகுப்பினர் வரலாறடங்கிய நூல் களே ஒரே தொகுப்பாக ஆக்கி உதவினுல், கற்பார்க்கும், கற்கவிழைவார்க்கும், துறைபோவார்க்கும் கற்பயனும் எனக்கருதி ஒரே கட்டடமாகக்கட்டி அழகிய முறை யுடன் அமைத்து வெளியிட்டுள்ளோம்.

அறிஞருலகம் இதனையும் இதனோடு தொடர்ந்து வெளிவரும் ஏனைய இதுபோன்ற தொகுப்பு நூல்களே யும் வாங்கிக்கற்று நற்பேறெய்தி இன்புறுமென நம்பு கின்ருேம். -

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.