பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரணியமுட்டத்துப்........பெருங்கெளசிகனர் 49

செல்கின்ற விேர், சேயாற்றைக் கண்டதும், அவன் தன் கரையையே பற்றிச் செல்விராயின், அண்மையில் அவன் மூதுாராம் செங்கண்மாவினைச் சென்று அடைவிர்,” எனக் கூறும் புலவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றுார்ப் பெருங் கெளசிகளுள் எத்துணைச் சிறந்த வழிகாட்டியாக விளங்கினர் என்பதை நோக்குக!

மலேயும், காடும் மண்டிக்கிடக்கும் குறிஞ்சிகிலத்தே உண்டாம் பல்வேறு ஒலிகளே, ஒரிடத்தே வகைப்படுத்திக் கூறியுள்ளார் புலவர் கூத்தர் கொண்டுசெல்லும் இசைக் கருவிகளினின்றும் எழும் இன்னிசைபோலும் அருவி யொலி ஒருபால், யானேயைப் பிடிப்பார் எழுப்பும் பேரொலி ஒருபால்; எய்ப்பன்றியால் தாக்குண்ட கானவர் எழுப்பும் அழுகையொலி ஒருபால் , தம் கணவர் மார்பில் புலி பாய்ந்து தாக்கிய புண்ணேப் பாடிப் போக்கும் கொடிக் சியர் பாடல் ஒலி ஒருபால்; வேங்கைமலர் கொய்யும் மகளிர் எழுப்பும் புலிபுலிப்பூசல் ஒருபால் சூலுற்ற தனக்கு வேண்டும் தழை தேடிச்சென்ற தன் களிற்றினப் புலி தாக்கக் கண்டு அப் பிடி, அக் காட்டுவாழ் யானேக ளோடும் கூடி எழுப்பும் கூப்பீட்டொலி ஒருபால் கிளேக் குக் கிளேத் தாவுங்கால், தன் குட்டி பிடி தளர்ந்து, ஆழ்ந்த முழையிலே வீழ்ந்திறப்பக் கண்ட மந்தி, தன் இனத் தோடும் கூடி எழுப்பும் இாங்கற் பேரொலி ஒருபால்; குரங்கும் ஏறமாட்டாக் குன்றின் உச்சியில் உள்ள ேதனிருலே ஏணிகொண்டு ஏறிப்பெற்ற கானவர் வெற்றிக் களிப் பால் எழுப்பும் ஆரவாரம் ஒருபால் அழித்தற்கரிய பகை வர்தம் அரண்களே அழித்துப் பெரும்பொருள் கொணர்ந்த கானவர், களிப்பு மிகுதியால் எழுப்பும் ஆரவாரம் ஒரு பால் குறக்குல மகளிர் ஆடும் குரவைக்கூத்திடை எழும் ஆரவாரம் ஒருபால் கல்மீதும், கற்பாறைகள்மீதும் ஒடி வரும் ஆறுகள், மலே முழைஞ்சுகளில் வீழ்வதால் எழும் இடையருப் பேரொலி ஒருபால், யானையைப் புழக்கும் பாகர் "அப்புது அப்பது ஆது, ஆது, ஐ.இ." என்பன போன்ற மொழிகளைக் கற்றுத் தருங்கால் எழும் ஆதலுரம்

- மா. பு.-4 . . ... . . . . ;