பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t2 மாநகர்ப் புலவர்கள்

காள் புலவர் முடமோசியார், சேரமானேடு, வேண் மாடத்து வீற்றிருந்தார். அக்காலே, அக்கருவூர்த் தெரு வழியே களிறு ஒன்று மதம்பட்டு, திங்களேச் சூழ்ந்த விண்மீன்போல் வீரர் பலர் சூழ்ந்துகின்று அடக்கவும் அடங்காது, கடலைக் கிழித்தோடும் நாவாய்போல், வீரர் .திரளினின்றும் மிரண்டு ஒடுவதையும், அவ் யானைமீது வீரன் ஒருவன் வீற்றிருப்பதையும், அந்துவஞ்சேரல் கண் டான். உடனே புலவர்க்கு அக்காட்சியைக் காட்டி, அவன் யார் என வினவினன். அவர், அவ் யானேமீது ஊர்ந்து செல்வோன், முடித்தலேக் கோப்பெருநற்கிள்ளி என்பதை அறிந்தவராதலின், அவனே இன்னன் என அவனுக்கு அறிவித்ததோடு அமையாது, பகைவர் காட் டகத்தே வாழ்வுழி, மதம்பட்ட களிற்றின்மீது ஊர்ந்து கிற்றல் கேடுதரும் செயலாம் ஆதலின், அவன் நோயின்றிப் பெயர்வானுக என வேண்டி கிற்பாராயினர் ; இங்கிகழ்ச்சி யினே அவர் பாடிய புறநானூற்றுப் பாட்டொன்று விளங்க உரைத்துளது.

புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரால் பெரிதும் பாராட்டப்பெற்றவன், ஆய் அண்டிரனுவன்; ஆயை, முடம்ோசியாரேயல்லாமல், உமட்டுர்கிழார் மகனர் பரங்கொற்றனர், காரிக்கண்ணனர், குட்டுவன்கீரனர், அதுறையூர் ஓடைகிழார், பரணர், பெருஞ்சித்திரளுர், இடைக் கழிகாட்டு கல்லூர் நத்தத்தனர் போன்ற புலவர்களும் பாடியுள்ளன்ரெனின், இவன் பெருமையினே எடுத்துக் கூறவும் ஒண்னுமோ! ஆஅய் கடையெழுவள்ளல்களுள் ஒருவன் , தமிழக மலைகளுள் தலைசிறந்ததாய பொதிய மலைக்குரியவன் பொதியமலைச்சாரலேச் சார்ந்த ஆய்குடி அவன் அரசிருக்கை; இவன் அண்டிரன் எனவும் அழைக் கப்பெறுவன் அண்டிரன் என்பது ஆந்திரன் என்னும் தெலுங்குச் சொல்லின் திரிபாம் எனக்கொண்டு, இவன் தெலுங்கு நாட்டினன் அகத்திய முனிவர், தமிழ்நாடு புேரந்தகால உடன்கொணர்ந்த பதினெண்குடி வேளிருள் ஒருவன் என்றெல்லாம் கூறுவர்; ஆயின் வள்ளல் தன்மை