பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 மாநகர்ப் புலவர்கள்

கடலே அடுத்துளது. ஆண்டு யவனர் எனும் பெயரினராய புறநாட்டு வணிகமக்கள், கலங்களில் கிறையக் கொணர்ந்த பொன்னேக் கொடுத்து, மிளகினேப் பெற்று மீள்வர்; இத். தகு கடல் வாணிபத்தால் வளம்செறிந்தது அம்முசிறிசேரலர், சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க, யவனர் தந்த வினைமாண் நன்கலம், பொன்னெடு வந்து க்றியொடு பெயரும் வளங்கெழு முசிறி,” என்றும், கரும்பைப் பிழிந்துகொண்ட சாற்றினேக் காய்ச்சி ஆக்கிய வெல்லப் பாகோடு பாலேயும் கலந்து, அக்கலவையுள் இட்டுக் கலந்த அவல் உணவை, வருவார்க்கெல்லாம் வழங் கிப் பின் உண்ணும் வளம்சால் பெருமக்கள் வாழும் சிறப் புடையது உறந்தை-'கரும்பின், விளேகழை பிழிந்த அங் தீஞ் சேற்ருேடு, பால்பெய் செங்கெல் பாசவல் பகுக்கும். புனல்பொரு புதவின் உறந்தை,” என்றும், சோழர், வன்மையாற்கொண்ட வெற்றி பல உடையவர்: அவ்வெற்றி அவர் வாட்போர் வன்மையால் உண்டாம்; அவர்க்குரியது காவிரிப் பேராறு-'வலம்படு வென்றி வாய்வாட் சோழர், இலங்குர்ேக் காவிரி' என்றும், பரங்குன்று கூடல் கக ருக்கு மேற்பால் உளது; மயிற்கொடியுடையான் முருகன் மகிழ்ந்துறையும் மலே அது இடையரு விழாப் பல உடை யது அக்குன்று-"கூடற் குடா அது, பல்பொறி மஞ்ஞை வெல்கெர்டி உயரிய, ஒடியா விழவின் நெடியோன் குன்றத் தும்” என்றும், உம்பற்காடு சோர்க்குரியது; அது யானே களே மிகுதியாக உடையது; அதேைலயே அதற்கும் அப் பெயர் உண்டாயிற்று; உம்பல் யானே எனும் பொருள் உடையது; அக்காட்டுவாழ் யானேகள் பலாவினேப் பிளந்து உண்ணும் இயல்பின-'பெருங்களிற்று இனகிரை கை. தொடுஉப் பெயரும், தீஞ்சுளேப் பலவின் தொழுதி உம்பற், பெருங்காடு." என்றும் கூறும் வரலாற்று விளக்கங்களே உணர்க.

வெள்ளி வானத்தே எமு, பறவைகள் மரத்தின் தே உள்ள தம் கூட்டில் இருந்து குரல் எழுப்ப, ரீர்க் குளத்தில் தாமரை மலர, திங்கள் தன் தண்