பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 மாககர்ப் புலவர்கள் பட்ட தம் ஊரில் வாழ வகையின்றி, மக்கள் வேறிடம் தேடிச்சென்று விடுவர்; அதல்ை, அவர் போற்றிவளர்த்த மன்றப் பாவைகள் பாழுஅம் மழை, பாவையின் வடி வினைச் சிதைக்கும்; வெயில், அதன் நிறத்தினே அழிக்கும்: இவ்வாறு, மக்கள் வாழ்விழக்க, மன்றப் பாவைகள் பாழான காட்சியினைக் கண்டு கலங்கிய புலவர் வேம்பற். ஆறுார்க் குமரனர், அவ்வாறு பாழான பாவையைத் தலைவ இனப் பிரிந்தமையால், வண்ணமும், வடிவமும் சிதைந்து வேறுபட்டுத் தோன்றும் தலைமகள் ஒருத்திக்கு உவமை. காட்டித் தம் உள்ளத்துறு துயரை உணர்த்தியுள்ளார்:

'முனைபுலம் பெயர்த்த புல்லென் மன்றத்துப் பெயலுற கெகிழ்ந்து, வெயிலுறச் சாஅய் வினேயழி பாவையின் உலறி மனே யொழிந் திருத்தல்.” (அகம் : கடுள): வேம்பற்றுார்க் குமரனர் பாடிய வல்லாண் முல்லே. தழுவிய பாட்டொன்று புறநானூற்றில் உளது; அவ் வொரு பாட்டும், பொருள் தோன்ருவாறு சிதைந்து காணப்படுவதால், செய்யுள் நலத்தினேச் சிறக்க உணர முடியவில்லை. அதில் காணப்படும் ஒரு தொடர், அக் கால மக்கள், புலித்தோலேயும், பாயையும் தம் படுக்கைக்குரியன: வாகக் கொண்டிருந்தனர் என்பதை உணர்த்துகிறது.

தம்பால் வந்து பொருள் வேண்டி நிற்பார் அனைவர்க் கும், அவர் விரும்புவன அளித்துப் போற்றும் பேரறிவின ரும் கள்ளுண்பராயின், அறிவிழந்து, தாம் படுத்தற்காம் இடம் இது, தாம் படுத்தற்காகா இடம் இது எனப் பகுத் துணரும் உணர்விழந்து, மனேமுன்றிற்கண்ணும் வீழ்ந்து, உறங்கிவிடுவர் எனக் கூறிக் கள்ளுண்டு களிப்பாரைப் பழித். துரைக்கின்றார் புலவர் குமரனர்.

'வந்து,

முன்றிற் கிடந்த பெருங்களி யாளற்கு அதள் உண் டாயினும், பாய் உண் டாயினும் - யாதுண் டாயினும் கொடுமின்............' (புறம்: க.க.எ).