பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஉ. தொண்டி ஆமூர்ச் சாத்தனுர்

ஆமூர் என்ற ஊர்கள் தமிழகத்தே பல உள்ளன : தோண்டைநாட்டில் உள்ள இருபத்து நான்கு கோட்டங் களுள் ஒன்ருகிய ஆமூர்க் கோட்டத்து ஆமூர் நாட்டில் ஒர் ஆமூர் உளது; மகாபலிபுரம் இவ் ஆமூர் நாட்டைச் சார்ந்த தாம் என்றும் கூறுவர். தென்னுர்க்காடு மாவட்டம் திண்டிவனத்தைச் சூழ உள்ள ஒய்மானுட்டில் உள்ள ஆமூரும், இவ் ஆமூரே என்ப; இவ் ஆமூர், “அந்தணர் அருகா, அருங்கடி வியனகர், அந்தண் கிடங்கின் ஆமூர்,' எனப் பாராட்டப்பெறும்; (சிறுபாண் : 187-188). சோழன் போர்வைக் கோப் பெருநற் கிள்ளியால் பொருது தோற் கடிக்கப்பெற்ற மல்லனுக்குரிய ஆமூர் ஒன்று முக்காவல் காட்டில் உளது; அது, முக்காவல்நாட்டு ஆமூர் என்றே அழைக்கப்பெறும். புலவர்கள், அதை 'இன்கடுங் கள் ளின் ஆமூர்," எனப் பாராட்டுவர் (புறம்; 80). சேரநாட் டில் ஒர் ஆமூர் உளது; அது, குறும்பொறை என்ற மலேக்குக் கிழக்கே உளது என்றும், கொடுமுடி என்பா இணுக்கு உரியது என்றும் புலவர்கள் கூறுவர். 'குறும் பொறைக் குனு அது.......கொடுமுடி காக்கும் குரூஉக்கண் நெடுமதில் சேண்விளங்கு சிறப்பின் ஆமூர்" (அகம்: 159). புலவர் சாத்தனர், தொண்டி ஆமூர்ச் சாத்தனர் என அழைக்கப்பெறுவதால், அவர் பிறந்த ஆமூர், தொண்டி நகரைத் தலைநகராகக்கொண்ட சேரநாட்டைச் சார்ந்த ஆமூர் என்றே கொள்வர் புலவர்.

கடலில் விளேயும் உப்பு, உமணர்க்கு வேண்டும் பய னெல்லாம் அளித்துத் துணே புரிவதால், அதைக் கடலில் விளக்த அமிழ்தம் எனப் புலவர் கூறுவது போற்று. குரியதாம்.

'ஒலி திரைக்

கடல்விளை அமிழ் தின் கணம்சால் உமணர்.'

(அகம் : கசுக}