பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஎ. படுமரத்து மோசிக்கொற்றன்

படுமரத்து மோசிகீரனுரைப் போன்றே, இவரும் மோசியினின்றும் போந்து, படுமரத்தில் வாழ்ந்தவராவர்.

இவர் பாடிய பாட்டு ஒன்றே நமக்குக் கிடைத்துளது.

மக்க்ள் கோடைக்காலத்தே குளிர்ந்த காற்று, குளிர்ந்த நீர், குளிர்ந்த சூழ்நிலை ஆகியவற்றை விரும்புவதும், பணி மிகும் மாரிக்காலத்தே வெப்பமான பொருள்களேய்ே விரும்புவதும் இயல்பாம். இதை உணர்ந்த புலவர், தலைவி ஒருத்தியின் நலத்தினேப் பாராட்டுங்கால், அவள் கோடைக் காலத்தே குளிர்ந்து தோன்றுவாள் ; மாரிக்காலத்தே மனம் மகிழும் வெப்பம் உடையளாவள் என்று பாராட்டி இயற். கைப் பொருள்கள்பால் தாம் பெற்ற அறிவின் நுட்பத்தை

நன்கு புலப்படுத்தி உள்ளார்.

தலைமகளின், தண்மை வெம்மைகளுக்கு, பொதியிற் சந்தனத்தையும், வெயிலில் நின்ற தாமரை, அவ்வெயில் மறையக் கூம்பியக்கால் சிறிதே வெம்மையுற்றிருக்கும் அம் மலரின் உள்ளகத்தையும் முறையே உவமையாகக் கூறிய அவர் அறிவின் நுட்பம் கண்டு அகமகிழ்வோமாக!

சந்தனத்தின் சிறப்பினேக் கூறத் தொடங்கி, அது வளரும் பொதியமலையின் மாண்பினே, அது உலகத்தாரால் உள்புக்குக் காணலாகா அருமை உடையது; தெய்வங்கள் உறையும் சிறப்புடையது எனவும் உரைத்துள்ளார் :

'மன்உயிர் அறியாத் துன்னரும் பொதியில்

குருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப வேனி லானே தண்ணியள்; பணியே வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி ஐயென அலங்குவெயில் பொதிந்த தாமரை உள்ளகத் தன்ன சிறுவெம் மையளே.' (குறுங் : க.எசு)

سیستمeیمم-------مم-م.