பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மாநகர்ப் புலவர்கள்

பொருது அவர் உள்ளம் என்பதை உணர்ந்து, இப்போரால் அவனுக்குப் பழியுண்டாம் என்றுகூறி அவன் உள்ளத்தே அச்சம் வரச்செய்து போர்விலக்கலே இனிச் செயற்பாலது, எனத் துணிந்து, “அரசே! போரில் புகுந்தார் இருவரும். வெற்றிகொள்ளுதல் இயலாது ; ஒருவரே வெற்றிகோடல் இயலும்; நீயும், கின் மக்களும் மேற்கொள்ளும் இப்போரில், கின் மக்கள் இருவராயும், இளைஞராயும் இருப்பதால் ஒரு வேளே அவர் வென்றார் எனில், நீ இதுகாறும் பெற்ற -வெற்றியெலாம் பாழாகப் பெரும்பழி யன்ருே நின்பால் வந்துஅம்! இதை எண்ணிப் பார்ப்பாயாக, போர் நோக்கிச் புறப்படுதற்கு முன்," என்று கூறி முடித்தார். -

தாம் கூறிய அறவுரைகள், அரசன் உள்ளத்தே புகுந்து அதற்குரிய பயனே அளிக்கத் தொடங்கின என் புதை அறிந்த புலவர் உடனே 'அரசே! போர்விட்டுப் புறப்படுக ! அடைந்தார்க்கு அருள் புரியும் பெரியோயை கின்னே, விண்ணுலகோர் விரும்பி வரவேற்றலே விரும்பு கின்ருேம் யாம் ; அதற்கு வழி இப்போரன்று நல்லன. பல ஆற்றுதல் வேண்டும் அதற்கு ; ஆகவே அந் நல்லன. புரிய இன்றே எழுக!" என்று கூறினர். புலவர் பொன் மொழிகள் பயன் அளித்தன. போர் ஒழித்து மீண்டான் அரசன் ஆனால் மக்கள் எதிர்த்தனரே என்ற எண்ணம், உலகவாழ்வை வெறுக்கச் செய்தது; வடக்கிருந்து உயிர் விட்டுப் புகழ்கொண்டான் ; போர் மேற்கொண்டு, பகை யாசர் பழிக்க இறக்க இருந்த அரசனேப் புலவரும் பிறரும் போற்றிப் புகழ்ந்து கண்ணிர்விட்டுக் கலங்குமாறு இறக்கச் செய்த அருந்திறல், புல்லாற்றுார் எயிற்றியர்ைக் கிருத்தலே அறிந்து அகம் மிக மகிழாதார் யார்? . . .

“மண்டமர் அட்ட மதனுடை கோன்தாள்

வெண்குட்ை விளக்கும் விறல்கெழு வேந்தே ! பொங்குநீர் உடுத்த இம்மலர்தல் உலகத்து

கின்தில் வந்த் இருவரை-கினைப்பின் தோன்றுறை துப்பின்கின் பகைஞரும் அல்லர்; அர்விெங்காட்சியொடுமாறுஎதிர்பு எழுந்தவர் :