பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$8 வள்ளல்கள்

போவோம் என்று எண்ணுவீராயின், அஃதும் உங்களால் ஆகாது; ஆற்றல்மிக்க பெரும்படை கொண்டு மூவரும் ஒன்றிகின்று கடும்போரிடினும் பறம்பினேப் பற்றல் இய லாது; வேற்படை உங்கட்கு வெற்றியைத் தராது; ஆகவே, முற்றுகை ஒழித்து அகலுங்கள்; அகலாது, எவ்வாரு யினும் பறம்பினேப் பற்றுவதே எங்கள் கருத்தாம் என்பீ ாயின், அதற்குப் போர் உங்கட்குப் பயன் அளிக்காது; அதைப் பெறக்கூடிய எளிய வழியொன்று உண்டு; பேரரசர், போர்புரிந்து பெறமாட்டா ஒன்றைப் பெண் ணுெருத்தி பாடிப் பெற்றுவிடுவாள்; ஆகவே, பறம்பினைப் பெறவேண்டின், யான் கூறுமாறு செய்யுங்கள்; பாரிபால் சென்று பாடிப் பரிசில்பெறும் பாணரைப்போல் வேடங் தாங்கிக்கொள்ளுங்கள்; உங்கள் மனேவிமார்களையும், பாணர்பின் செல்லும் விறலியர்போல் உருமாற்றி விடுங்கள்; அவர்கள் முன்னே ஆடிச்செல்ல, கையில் யாழேந்தி அவர் பின்னே பாடிச்சென்று, பறம்பின் வாயிலில் கின்று பாரி யைப் பாடிப் பறம்பினைப் பரிசிலாகக் கேளுங்கள், பறம்பு, உறுதியாக உங்கள் உடைமையாம்;. பாடினுல் கிடைக்கும் பறம்பு என்று கூறும் என் மறதியை என்னென்பேன் ? பறம்புகாட்டைப் போன்றே, பறம்பு மலேயும் பாடினர் உடைமையாகிவிட்டதை மறந்தேபோனேன், பறம்பினே அளிக்கும் உரிமையும் பாரிக்கு இல்லை; ஆகவே, பறம் பினேப் பெறுதற்கும் வழியில்லை; வேண்டுமானல் பாரியைத் தான்் பெற்முடியும்; பாரியைப் பெறுதல் அருமையன்று; முன்னே யான் கூறியவாறே சென்று அவனேப் பாராட்டி, "பாரி கின்னேயே வேண்டிவந்தோம் நாங்கள்” என இருகையேந்தி இரந்தால், இரப்போர்க்கு இல்லை என்று கூரு அறமேற்கொண்ட அவன், வாரேன், என்று கூருது,

உங்கள்பால் வந்துகின்று உங்கள் உடைமையாகுவன்; '

ஆகவே, அவனப்பெற அம்முறையினை மேற்கொண்டு.

முற் துகை ஒழியுங்கள், ’ என்று கூறினர்.

முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்ஞ்டு முந்நாறு ஊரும் பரிசிலர் பெற்ற்னர்: