பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 வள்ளல்கள்

தந்தை எங்களோடில்லை; அவரை இழந்துவிட்டோம் யாங்கள்; எங்கள் குன்றும் பகைவர் கைப்பட்டுவிட்டது; பகைவர்கள் பேரரசர்கள்.காம்; ஆனால், அவர்கள், எங்கள் தந்தையைக் கொன்று புறம்பாணக் கொண்டது போர் புரிந்து அல்லவே! வஞ்சித்தன்ருே கொண்டனர்?’ என்று விாய்விட்டு அழுவாராயினர்;

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்

எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர்கொளார்;

இற்றைத் திங்கள், இவ்வெண் ணிலவின்

வென்றெறி முரசின் வேந்தர்! எம்

குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!'

. (புறம் : க.க.உ) - பாரியை நினைந்து புலம்பிக்கொண்டிருந்த புலவர், அவன் மகளிரின் அழுகை யொலி கேட்டு உணர்வுற்ருர்; அம்மகளிர்க்கு அறிவுரைகள் பலகூறித் தேற்றினர்; செல்வ வாழ்வில் சிறக்க வாழ்ந்த இவர்கள் இவ்வாறு தனிமையில் வாழநேரின், அவர் உள்ளம் உறுதுயர்கொள்ளும்; தனிமைத் துயர் வளத் துணைசெய்யும்; ஆகவே உள்ளத்துயர் தீர்க்கும் உறுதுணையே அவர்களுக்கு இப்போது தேவை: தாய் தந்தையர்க்குப் பின், மகளிர்க்கு உறுதுணையாவார் அவர் கணவரே; ஆதலின் இம்மகளிர்க்கு விரைவில் மனம் முடித்தல் வேண்டும் என்று முடிவுகொண்டார்; உடனே, ப்ாரியின் பெருமைக்கும், இம்மகளிரின் அருமைக்கும். ஏற்ற ஆடவரைத் தேடிக் காணவேண்டிய கடமையினே மேற்கொண்டார் புலவர். - . - -

விச்சி என்ற மலையையும், அதைச்சூழ இருந்த சிறு நாட்டையும் ஆண்டுவந்தனர் விச்சியர் என்ற ஒர் அரச இனத்தார்; அக்கால அந் நாடாண்டிருந்த விச்சிக்கோ ன்னும் பெயருடையா ன் குலத்தாலும், குணத்தாலும், கொடையாலும், கொற்றத்தாலும் சிறந்து விளங்குவது x- அறிந்த கபிலர், அவன், பாரி மகளிரை மணக்கும் தகுதி அடைபனுவன் என்று கொண்டார்; உடனே, மக்ளிசையும் ஆட்டனழைத்துக்கொண்டு அவன்பால் சென்றார் விச்சிக்