பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேகன் 83

பசித்தும் வாரேம் பாரமும் இலம்ே: களங்கனியன்ன கருங்கோட்டுச் சிறியாழ் கயம்புரிந்து உறையுகர் கடுங்கப் பண்ணி அறம்செய் திமோ அருள்வெய் யோய் ! என இஃதுயாம் இரந்த பரிசில் : அஃது இருளின் இனமணி நெடுங்தேர் ஏறி - இன்ன துறைவி அரும்ப்டர் களமே. " . . . . . . (புறம் : கசடு) பேகன் பெருமையுணர்ந்து பாராட்ட விரும்பிய பெருங்குன்றார் கிழார், மலையிடை வழிகள் பலவற்றைக் கடந்துசென்று அவன் மனையடைந்தார்; மனே முன்றிலில் பெண்ணுெருத்தி தனியே கின்று வருந்தியிருப்பதைக் கண்டார் ; அவளருகே சென்று, அம்மையே தனியே அழுது கிற்கும் வீேர் பாவிரோ பேகன் துமக்கு என்ன உறவினனே அழுதற்கு என்னேயோ காரணம்?’ என் றெல்லாம் வினவினர் ; அவன், பேகன்பால் கிடந்து பழி தரும் பரத்தையர் ஒழுக்கத்தினே உணர்த்தி உறுதுயர் உற்ருள் ; பெருங்கொடையாளன் எனப் போற்றற்குரிய பேகன் பிழையுடையான் என்பதறிந்த புலவர் பெரிதும் வருந்தினர் ; தம் வறுமைதீர அவனளிக்கும் பொருள் பெற்று மீள்வதினும், அவனே நல்வழிப்படுத்தி, அவன் மனைவி நல்லாளோடு வாழச்செய்வதே தம் முன்னிற்கும் பணியாம் எனத் துண்ரிந்தார் ; உடனே பேகன்வாழ் கல்லூர் சென்றார், பேகனைக் கண்டு .பாராட்டினர்; பாராட்டிய புலவர்க்குப் பரிசளிக்க முன்வந்தான்் பேகன் ; அங்கிலையில், பேக! எமக்குப் பரிசளிக்க விரும்புவை யாயின், யாம் வேண்டும் பரிசிலேயே அளித்தல்வேண்டும் ; யாம் வேண்டும் பரிசில் பொன்னே, பொருளேர் அன்று ; நின் பிரிவால் வாடிப் பொலிவுகுன்றி கிற்கும் கின் மனைவி மாணலம் பெறுமாறு நீ இன்னே கின்மனே செல்லுதல் வேண்டும் ; அதுவே யாம் வேண்டும் பரிசில்” என்று அறிவுரை கூறினர் : . . . .

' கன்முழை அருவிப் பன்மலை நீங்திச் . சிறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக்