பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 7 I 359, கையலரில் கோலும் கருவண்ண மும்படமும் தையலர் வல்லே தரவாங்கி-வையத்தை 36.0, மூடிய தோர்.அடியா மூதண்ட கூடத்தைச் சூடிய தோர்.அடியாம் தொல்கோலம்-நாடும் 361. படம்முடியப் பல்காலும் பார்க்கும்இரு கொங்கைத் தடம்முடியக் கண்ஆரம் சாத்தும்-படிஏழும் 362. உண்ட திருவாய் உதரம் வகுப்பது - கண்டகிழிகொல்எனக் கைசோரும்-கொண்டலுக்குக் 363. குன்றெடுத்தோர் ஆழி கொழுஞ்சோதி ஆயிரத்துக் கன்றெடுத்த கைக்கி தடாதென்னும்-வென்றி 358. கோல் - துர்ரிகை. சோழன் மேனி கரிய நிறமுடையதாத லின் அவன் வடிவை எழுதக் கரிய வண்ணத்தைத் தந்தனர். கரை வண்ணம் என்னும் பாடத்திற்குக் கரைத்தவண்ணம் என்று பொருள் கொள்க. படம் -ஒவியம் எழுதும் கிழி. வல்லே - விரைவில். 360-64. எழுதரிதென்று பேரிளம் பெண் எண்ணுகிருள். 360. மூடியது ஒர் அடியாது. மூதண்ட கூடத்தை முதிய அண்ட கூடமாகிய உச்சியை தொல் கோலம் -பழைய திரிவிக்கிரம வடிவம். நாடும். எழுத நினைப்பாள். . ^ - - --- 361. படம் முடியப் பல்காலும் பார்க்கும் - கையில் கிழி முழு வதையும் பல தரமும் பார்ப்பாள். கண் ஆரம் சாத்தும் - கண்ணி லிருந்து உதிரும் முத்துப் போன்ற, நீர்த்துளிகளை அணிவாள். இந்தச் சிறிய கிழியில் அவனுடைய பெரிய வடிவை எழுத இயலாதே என்று எண்ணிக் கண்ணிர் விட்டாள். படி ஏழும் - ஏழு உலகங்களையும். 362. திருவாயையும் உதரத்தையும் ஒவியத்தில் அமைப்பது. கண்ட கிழிகொல் - இங்கே நான் கண்ட இந்தக் கிழியோ, கொண் டலுக்கு இந்திரன் விட்ட மேகங்களைத் தடுப்பதற்கு. 363. குன்று - கோவர்த்தனகிரி. ஆழி - சக்கரம். கொழுஞ் சோதி ஆயிர்த்துக்கு - வளமான சுடர்கள் பலவற்றையுடைய சூரியன மறைப்பதற்கு; ஆயிரம் என்றது அளவற்றது என்பதைப் புலப்படுத் தியது; அனந்தவர்சி என்பர். பாரதப் போரில் கண்ணன் சக்கரத் தால் கதிரவனே மறைத்தான். ஈது அடாது - இது பொருந்தாது.