பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ஒத்துழையாமை யாதொரு தடுமாற்றமுமின்றி அறிவிப்பதோடு, அதற்குச் செய்து வரும் சகல உதவிகளையும் மறுக்கவேண்டும். 4. ஆகையால் நமக்குள்ள ஒரே மருந்து ஒத்துழை யாமைதான். பலாத்காரத்தை அறவே ஒழித்து விட்டால் அதுதான் சகலவற்றிலும் அதிகப் பலன் கரக் கூடியதும் மிகச் சுத்தமானதுமான மருந்து. நம்முடைய ஒத்துழைப் பினுல் நாம் பெரிதும் போற்றும் மதக் கொள்கைகளுக்குக் கேவலமும் கேடும் விளையும் பொழுது, ஒத்துழையாமை யைக் கைக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமை. 5. பழிவாங்கும் கருத்துடன் அதைக் கையாண் டால், அது பயன் தராது. தன்னைச் சுத்தஞ் செய்து கொள்ளவும், தியாகஞ் செய்துகொள்ளவும் எண்ணி அதைக் கையாண்டால் நிச்சயம் வெற்றி கரும். 6. அநேகமாய் சாதாரண ராஜீய இயக்கம் அரசாங் கத்திற்குக் கஷ்ட முண்டுபண்ணும் நோக்கத்துடனேயே துவக்கப்படும். ஆனல் சத்யாக்ரக இயக்கம் அந் நோக்கத் துடன் ஏற்படவில்லை. சத்யாக்ரகியின் நடவடிக்கைகளால் அரசாங்கத்திற்குக் கஷ்டங்கள் நேரிடலாம்; ஆனல் அவன் அவை களைக் கவனிப்பதில்லை. 7. சத்யாக்ரகி பரிகாரக் தேடுவதற்குக் கஷ்டமுண்டு பண்ணுவதைக் கருதாமல் கஷ்டம் அநுபவிப்பதையே கருதுவான். 8. ஒத்துழையாகாரில் பல ரு ைடய ஒத்துழையா மைக்குக் காரணம் அன்பு அன்று பொருளற்ற பகை மையே காரணம் என்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். of . பொருளற்ற பகைமை என்று கான் சொல்வதற்குக் காரணம் ஒத்துழையாகாரில் பலர் பாராட்டும் பகைமைக்கு ஒத்துழையாமைத் திட்டத்தில் இடமேயில்லை என்பது தான். ஒருவனும் பகைமை காரணமாகத் தியாகஞ்