பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5


தைக் கொண்டோ கொஞ்சம் கோபம் பிறந்தால் போதும் உள்ளத்திலே உறங்கிக் கொண்டிருக்கும் பழமைம் பாம்பு சீறிப் படமெடுக்கும். கொண்டையாவின் ஜாதி மட்டுமே அப்பொழுது கண்களுக்குத் தெரியும்; பி. ஏ. பட்டம். புதிய மோட்டார் இவை மறையும்.

பயணம், படிப்பு இவைகளின் மூலம் ஜாதி பேதத்தின் கொடுமையை ஓரளவுக்குக் குறைக்க முடியுமேயொழிய, அடியோடு அழிக்க முடிவதில்லை. அரசியலில் சமத்துவம் ஏற்பட்டுவிட்டால் மட்டும் சமூகத்திலுள்ள பேதங்கள் போய்விடுவதில்லை. அந்தப் பேதம் இருக்கும் வரையில் "சமதர்மம்" என்ற இலட்சியம் கனவில் காணும் காட்சியாகவே இருக்க முடியும். மக்களுக்குள் ஏற்படும் பேதம் பல காரணங்களால் அமைவதால், பேதத்தின் உருவம் பலவகையாகக் காட்சியளிக்கிறது. ஜாதியால், மதத்தால், குலத்தால், அரசியல் நிலையால், பொருளாதாரத்தால் பேதம் ஏற்படுகிறது. இவையனைத்தையும் அகற்றியாக வேண்டும். ஆனால் இந்த நாட்டிலே, ஜாதிதான் மக்களுக்குள் பேதத்தை ஏற்படுத்தும் முதல் சாதனம். மக்களின் இரத்தத்திலே கலக்கப்பட்டிருக்கும் கடு விஷம்--மனதிலே இடக்கு நோயைப் புகுத்திவிட்ட முறை--எனவேதான், பேதமற்ற சமுதாயத்தை-- சத்துவத்தை--சமதர்மத்தை நாம் காண வேண்டுமானால் முதலில் ஜாதி தொலைந்தாக் வேண்டுமென்று நான் சார்ந்துள்ள அறிவியக்கம் பல காலமாகக் கூறி வருகிறது.

மனதிலே உள்ள தளைகளை நீக்குவது, அவசியமான காரியமென்பதை உணர்ந்து, ஐரோப்பாக் கண்டத்திலே பேரறிவாளர்களான, வால்டேர், ரூசோ போன்றார் அறிவுத்துறைப் புரட்சிக்காகப் பணியாற்றினர். அதேவிதமான பணி தேவை. பொதுவாகவே நாம் சிந்தித்தால், இந்தப் பணியின் அவசியம் நன்கு விளங்கும். உலகில் உள்ள கஷ்டங்கள். வறுமை, பிணி, வேலையில்லாக் கொடுமை, பாட்டாளி படும் துயரம், இவைகள் எல்லோரும் இன்புற்று வாழுவதற்கு ஏற்ற வசதியில்லாததால் உண்டானவையா என்று யோசித்தால், இல்லை என்று தெரியும், ஆராய்ச்சியாளர்கள் புள்ளி விவரங்களைக் காட்டியே கூறியிருக்கிறார்-