பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50


குழந்தை. அம்மா அவசரமாக ஓடிவந்து, குழந்தையை அனைத்துக் கொண்டு பொல்லாத விளையாட்டு' என்று கூறி, நமது கரத்தைப் பிடித்து இழுத்துக் 'குழந்தையை ஏமாற்றதீர்கள்' என்று கோபிப்பார்கள்.

குடும்பத்தைப் பொறுத்தமட்டிலே, இதிலே ஒருவகைக் குதூகலம்கூட இருக்கும். குழந்தையின் உள்ளத்திலே எவ்வளவு வேதனை ஏற்பட்டிருக்கும் தெரியுமோ?

குழந்தையின் மனமே இப்படி. நாம் செய்துவரும் கொடுமை. எட்டுக்கோடி மக்களுக்கு. இறைவனின் இல்லத்தின் அருமைதனைக் கூறிக் கொண்டே "அந்த இடத்தில் மட்டும் நீ வரக்கூடாது" என்று கூறுகிறோம். சரியா? என்று யோசித்துப் பாருங்கஉ.

பக்தர்களைப் பரமன் வாழும் இடத்துக்குச் செல்லவொட்டாது தடுப்பது, சேயைத் தாயிடமிருந்து பிரிப்பது போன்ற பாதகமென்று, இதோபதேசம் செய்து பார்த்தாயிற்று.

இந்து மார்க்கத்தின், இந்நாள் இருக்கும் இந்த தீண்டாமை. அந்நாளில் ஆன்றோர் வாழ்ந்த விதம் வேறு; சான்றோரெல்லாரும் தீண்டாமையைக் கையாண்டதில்லை என்று விளக்கம் கூறியாகிவிட்டது.

எந்த இந்து மதத்திலே அந்த மக்கள் இருப்பதாகக் கூறிப் பெருமைப்பட்டுப் புள்ளி விவரம் காட்டிப் பூரிக்கிறோமோ அதே மதத்திலிருக்கும் மக்களை மதத்தின் ஊற்றாகக் கருதப்படும் கோயிலிலேயும் அனுமதிக்காதிருப்பது, மனப் புண்ணை, ஆற்ற முடியாத புண்ணை ஏற்படுத்திவிட்டது. இதனை ஆற்றிக்கொள்ள அந்த மக்களில் பலர், சிலுவைச் சூரணமோ, இஸ்லாமிய முறையையோ நாடுகின்றனர். இந்து சமுதாயம் குறைந்து வருகிறது என்ற யூகம் கூறியாகிவிட்டது.

வீரம், தியாகம், கடமை, பக்தி எனும் பல்வேறு உணர்ச்சி நரம்புகளை மீட்டிப் பார்த்தாகிவிட்டது.

நந்தனாரை, திருப்பாணாழ்வாரை--மக்களுக்குக் கவனப்படுத்தியாகிவிட்டது.