பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53


யாக 40 கோடி பேர், நாம் என்று பேசும்போது, "கிட்டேவராதே, எட்டி நில்," என்று கூறித் தடுக்கிறோமே, அவர்களின் தொகை 8 கோடி என்பதை மறந்தே விடுகிறோம். ஐந்தில் ஒரு பாகம் அவர்கள்-- பஞ்சேந்திரியத்தில் ஒன்று பழுதாகி விட்டதுபோல--நாட்டைக் கேட்டினில் ஆழ்த்துகிறோம்.

ஆலயங்களிலே பலவகையான சீர்திருத்தம் வேண்டும். என்று பேசுபவர்களேகூட, அங்கு ஆதித்திராவிடர்கள் வருவதைத் தடுக்கிறார்கள்.

அதுபோலவே, ஆதித்திராவிடர்களுக்குக் கல்வி, சுகாதாரவசதி செய்து தரவேண்டுமென்று அன்புடன் பேசத் தயாராக இருப்பவர்கள்கூட, அவர்களுக்குக் கோயில் பிரவேசம் கூடாது என்று பேசுகின்றன்ர்.

இந்த விசித்திர மனப்பான்மைக்குக் காரணம் இருக்கிறது. அர்த்தமற்றதல்ல இந்தப்போக்கு.

உபகாரம் செய்யச் சம்மதிக்கிறார்கள்--உரிமையைத் தருவது என்றால் சங்கடப்படுகிறார்கள். உபகாரம் செய்வது சுலபம்; உரிமையைத் தருவது கஷ்டம். உபகாரம் செய்வதிலே காட்டவேண்டிய தியாக உணர்ச்சி குறைவு--தீரமும் குறைவுதான்--ஆனால் உரிமையைத் தருவதற்குத்தியாக உணர்ச்சியும், தீரமும் அதிகமாகத் தேவை.

உபகாரத்தைப் பெறுக்குபவருக்கும், தருபவருக்கும் இடையே ஏறத்தாழ, அடிமை--எஜமானன் என்ற நிலைமைதான் இருக்கும். உரிமை தருவது, பெறுவது என்பது இந்த நிலையை அல்ல. இருவருக்கும் சமநிலை, சம அந்தஸ்து ஏற்படச் செய்கிறது. உபகாரம். "ஐயோ பாவம்" என்ற உணர்ச்சியின் விளைவு--உரிமை, 'என்' என்ற முழக்கத்தின் விளைவு, எனவேதான் சம்மதிப்பதில்லை. தீண்டாமை முறை உரிமையைப் பறிக்கும் சூது.

தீண்டாமை-எவ்வளவு வேதனையான வேடிக்கை இது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கெட்ட பொருளைத் தொடக்கூடாது--குப்பை கூளம், காற்றப்பொருள், ஆகியவைகளிடம் நிச்சயமாகத் தீண்-