பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னைக் கவர்ந்த புத்தகங்கள்



இருள் சூழ்ந்திருந்த அந்தக் குகையிலே, தேம்பித் தேம்பி அழுதபடி நின்று கொண்டிருந்த அலாவுதீன் சுவற்றின் மீது சாய்ந்தான்--அவன் கையிலிருந்த தீபம், சுவற்றிலே உராய்ந்தது--உடனே குகையே கிடுகிடுவென்று ஆடுவது போன்றதோர் சத்தம் கேட்டது--அலாவுதீனின் தலை கிறுகிறுவென்று சுழன்றது. ஐயோ என்று அலறினான். அவன் எதிரே ஒரு பயங்கரமான பூதம் வந்து நின்றது.

இதுபோன்ற வர்ணனைகளும், ஆச்சரியச் சம்பவங்களும், திடுக்கிடவைக்கும் தகவல்களும், நிரம்பிய அலாவுதீனின் அற்புததீபம் என்ற கதைவயப் படித்தபோது, அதிலேயே சொக்கிப்போய், அதைவிடச் சிறந்த புத்தகமே இடையாது என்று நம்பிய பருவம்--எனக்குமட்டுமல்ல-- உங்களில் பலருக்கும் உண்டு. அந்தச் சிறு பிராயத்தில் அந்தக் கதை நிச்சயமாக நமது உள்ளத்தைக் கவர்ந்தது--அலாவுதீன் அழுதபோது அழுதோம்--சிரித்தபோது சிரித்தோம். மந்திரவாதியை வெறுத்தோம். அவன் மாண்டான் என்று கதையிலே கூறப்பட்டபோது மகிழ்ந்தோம். மாலை விளையாட்டு, காலை உணவு, இரவுப்படிப்பு, வீட்டுக் கணக்கு முதலிய அலுவல்களையும் மறந்து அந்தக் கதையைப் படித்திருக்கிறோம். ரசித்திருக்கிறோம். பழைய விளக்குகளைப் பார்க்கும் போதெல்லாம், அந்த அற்புத தீபத்தின் நினைப்புதான்--உருட்டு விழியும் மருட்டும் மீசைகளைப் பார்க்கும்போதெல்லாம், அந்த மந்திரவாதியின் நினைப்புத்தான்--நமது இளம் உள்ளத்தில், அந்தக் கதை அவ்வளவு தூரம் குடி ஏறிவிட்டது--குதூகலம் தந்தது. ஆப்பிரிக்காவின் அகல நீளம். பசிபிக் கடலிலுள்ள தீவுகள், ஆயிரம் ரூபாயை அறுபத்தாறு பேருக்குப் பங்கிட்டுத் தருவது, ஆலமரத்துக்கு விழுது இருப்பதன் காரணம்