பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58


சுவை கருதி மட்டும் படிக்கும் பருவத்திலே, நம்பமுடியாத நிகழ்ச்சிகள். சாதிக்க முடியாத செயல் கொண்ட கதைகள், உள்ளத்தைக் கவருகின்றன. இந்த வரிசையில் மனதிலே. எளிதாகவும் விரைவாகவம் பதிந்துவிடும் கதைப் போக்கு கொண்டது விக்கிரமாதித்தன் கதை போன்றவைகள்.

அந்தப் பருவம் கடந்த பிறகு, பயன் தரும் ஏடுகளையே மனம் நாடுகிறது. பொழுது போக்குடன் பயனும் வந்து, சுவையும் தந்த புத்தகங்களிலே, பிரதாப முதலியார் சரித்திரத்தைக் குறிப்பிடுகிறேன் -- என் உள்ளத்தைக் கவர்ந்த ஏடுகளிலே, அது ஒன்று.

இம்மை, மறுமை என்ற இரு கூறுகளை ஏற்றுக்கொள்பவர்கள், மறுமைக்குத் துணைசெய்யும் ஏடுகளை மதிக்கத் தொடங்கி, அறிவாராய்ச்சிக்கு ஒவ்வாத கருத்துக்களை மனத்திலே திணித்துக்கொண்டு, கவலைச் சுமையும், பயபாரமும் கொண்டவர்களாகிறார்கள்.

அத்தகைய ஏடுகளை நான் படித்ததுண்டு--அவை. சில சமயம் அச்சத்தையும், அருவருப்பையும் தந்துள்ளன--உள்ளத்தைக் கவர்ந்ததில்லை. புராண இதிகாசக் கதைகளை நான் பள்ளிப்பருவத்திலே, படிக்க நேரிட்டபோது, அவை தேவையற்றவை என்ற கருத்தோ, அல்லது நம்மால் சாதிக்க முடியாதவைகளைக் கொண்ட ஏடுகள் என்றோ தான் எண்ணம் ஏற்பட்டது. உள்ளத்திலே சில சமயம் அதிர்ச்சி தரும், நரகலோக வர்ணனை. மண்டை ஆயிரம் சுக்கலாக வெடிப்பது, மலைப் பாம்பு விழுங்கிவிடுவது போன்றவைகளைப் பற்றிப் படிக்கும்போது--ஆனால் நீண்ட காலம், அந்த ஏடுகளோ, அவைகளிலே குறிப்பிடப்பட்ட கருத்துகளோ, மனதில் தங்கி இருந்ததில்லை. தினைப்புனத்துப் பட்சிகள் போல, அக்கருத்துக்கள கூட்டம் கூட்டமாக வரும். உள்ளத்தைத் தொடும். ஆனால் அறிவுத்தெளிவு--எனும் ஆலோலம், கேட்கக் கேட்க அவை பறந்தே போய்விடும்--எனக்கு மட்டுமல்ல; சராசரி அறிவுள்ள எவருக்கும்.