பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62


யில் உலவிய புலிகளிடமிருந்து, மனமருள் கொண்ட மான் கூட்டத்தை விடுவித்தவர்கள், நசுக்கப்பட்ட மக்களுக்குக் கை கொடுத்தவர்கள், ஆதிக்கப் பீடங்களான அரன்மனைகளையும், மடாலயங்களையும் அச்சமின்றி எதிர்த்து நின்று அறப்போர் நடத்தி மக்களின் நல் வாழ்வுக்குப் பாடுபட்டவர்களின் வரலாறுகள், மனதைக் கவருகின்றன். இந்த வரிசையில் அறியாமை இருளைக் கிழித்தெறிந்த அறிவுச் சுடர்; ஆதிக்கக் கோட்டையைத் தகர்த்தெரிந்த பகுத்தறிவுப் படைத் தலைவன், வக்கீர புத்தி கொண்ட வைதீகத்தின் வைரி, 'வால்டேர், "அரசாங்கம் என்னை அழிக்க முயற்சிக்கலாம். படை பலம் பாய்ந்து வரலாம், உலகே கேலியும் செய்யலாம். எனினும் நீதியை நிலைநாட்டி, ஏழையின் கண்ணீரைத் துடைத்தே தீருவேன்" என்று வீர முழக்கமிட்டுப் போரிட்டு வெற்றி கண்ட இலக்கிய வீரன், 'எமிலி ஜோலா', ஆகியவர்களின் வரலாறும். அவர்கள் அளித்து அறிவுரைகளைக் கொண்ட ஏடுகளையும் முக்கியமானதாகக் கருதுகிறேன். இதே முறையில், 'இங்கர்சாலின் பகுத்தறிவு வசனக் கவிதைகள் எழுச்சி யூட்டி என் மனதைக் கவர்ந்திருக்கிறது.

இயற்கை நுட்பங்களைக் கண்டறிந்து, மனித சமுதாயத்துக்கு உள்ள இன்னலைத் துடைத்து, இதம் தந்து, உலகைப் புதியதாய், வசதியதாங் ஆக்கித் தரும் விஞ்ஞான வித்தகர்களின் வாழ்க்கை வரலாறுகளும், ஆராய்ச்சிகளும் இன்றைய நிலையில் சுவையும், பயனும் தந்து மக்கள் உள்ளத்தைக் கவரவல்ல, அருமையான நூற்களாக அமைகின்றன.

தனி மனிதன் மட்டுமல்ல; உலகமே இந்த முறையிலே தான் அந்தந்தக் காலத்திற்கேற்ற முறையில் நூற்கள் மாறினாலும், இறந்தகால ஏடுகள் அனைத்தும் இறந்துவிடுவதில்லை.

'புத்தர்' துறவு, 'சாக்ரடீஸ்' வழக்கு மன்றத்தில் நின்று பேசுவது, 'ஏசு' சிலுவையில் அறைபடுவது, இளங்கோவடிக'ளின் துறவு, 'மனிமேகலை'யின் மன உறுதி. 'கண்ணகி'யின் கேள்விக் கணைகள், 'மாதவி'யின் மனநெகிழ்ச்சி, 'அசோக'னின் துக்கம், 'சகுந்தலை'யின் சோகம் போன்ற