பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66


டமை. எல்லாம் சுதந்தரத்தை இழந்துவிடவேண்டும் என்ற எண்ணங்கொண்டு அல்ல; அடிமைப் புத்தி ஏற்பட்டதால் அல்ல; சுதந்திரத்தின் விளைவாகச் சுக வாழ்வு கிடைக்கவேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக. இவ்வளவுக்கும், இன்று இருப்பது போலத் தனித்தனி ஆட்கள் அல்ல; ஆதி நாட்களில், இந்த அதிகாரம் அவ்வளவும் ஒரே இடத்தில்; ஒரே ஆளிடம் குவிந்துவிட்டது.

அவனே காட்டுராஜா--அவனுடைய சொல்லே சட்டம் அவனுடைய கூர்ந்த கண்களே போலீஸ்--அவன் சிறித்துப் பேசும் போது, உபதேசியார் கோலம். சீறிப் பேசும்போது மாஜிஸ்ட்ரேட் உருவம். ஆதரவு காட்டும்போது வக்கீல் வடிவம். இவ்வண்ணம், அவனே சகலமுமாக இருந்து வந்தான்,

மக்களின் சுகவாழ்வு, அவனுடைய வலிவையும், நேர்மையையும் பொறுத்திருந்தது. நீதியை நிலைநாட்டக் கூடிய அளவு வலிவும் மக்களின் சுக வாழ்க்கைக்காகவே, தன்னிடம் அதிகாரம் தரப்பட்டிருக்கிறது என்கிற நேர்மை உணர்ச்சியைப் பொறுத்துமே, மக்களின் சுக வாழ்வு இருந்தது.

சில காலத்துக்குப் பிறகு, அவன் தன் வலிவையும், பதவியையும் மட்டும் பெரியதென, முக்கியமானதென. எண்ணத் தொடங்கினான். மக்களின் நலனையும் நேர்மை உணர்ச்சியையும் கைவிட்டு விட்டான். கொடுங்கோலனானான். அதற்கும் சில காலத்துக்குப் பிறகு வலிவுகூட அல்ல முக்கியமான தேவையாக இருந்தது; வெறும் பதவியே போதுமானதாகிவிட்டது, கேடு செய்ய, சுக வாழ்வுக்காகத் தேடிக் கொண்ட சாதனமே பிறகு, சுதந்தரத்தைச் சூறையாடும் சக்தியாகிவிட்டது. உணர்ந்தோர் எதிர்க்கலாயினர். புரட்சி பூத்தது. உணர முடியாதோர் திகைத்தனர். அடிமைத்தனம் முளைத்தது. இந்த மூன்று சக்திகளுக்குமிடையே இருந்துவந்த தொடர்புதான் வரலாற்றிலே குறிக்கப்பட்டுள்ள பெரும்பாலன சம்பவங்கள்.

வானத்தில் வட்டமிடும் பறவை இதையும் இருப்பிடமும் தேடி பலவற்றைக் கண்டு ஏதேனும் ஒன்றினைக்