பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78


தது--முயற்சிகளை முறியடித்தது--முற்போக்கைக் கெடுத்தது.

அதோ ஓர் அழகு மங்கை; வயது பதினெட்டு; ஐயோ என்று அலறுகிறாள்; அவளைத் தொட்டுத் தாலிகட்டிய கிழவன் இறந்ததால், வாழ்வு கருகிற்றே என்று வேதனையால்.

விதியடி அம்மா விதி--பலர் கூறுகிறார்கள். எரியும் கொப்பரையாக உள்ள அவள் மனதிலே எண்ணெய் ஊற்றுகிறார்கள். இந்தக் கிழவனுக்கு--சாக்காட்டை நோக்கி நடக்கும் வயோதிகனுக்கு என்னைத் தாரமாக்கினீர்களே--தர்மமா, என்று துணிந்து கேட்டுவிடுகிறாள் ஓர் அறிவழகி.

அது உன் எழுத்தடியம்மா எழுத்து--நீ வந்த வழி--உனக்கு உள்ள விதி-- உடனே பதில் கிடைத்து விடுகிறது.

எலும்பு முறியப் பாடுபடுகிறேனே, ஏழையாக வதைகிறேனே என்று ஓலமிடுகிறான் பாட்டாளி--நீ கொடுத்து வைத்தது அவ்வளவுதான்--உடனே பதில் கிடைத்து விடுகிறது.

கடைவீதிக்குச் செல்கிறோம், கையில் பணத்துடன் கடைவீதி போய்ச் சேருவதற்குள் கடைவீதியிலே உள்ள பண்டங்களே மாறிவிடக் கூடும். விலையும் வித்தியாசமாகிவிடக் கூடும். அதுமட்டுமல்ல, எடுத்துச் செல்லும் காசும் செல்லுபடியாகாததாகி விடலாம்; குறையக் கூடும்; மறையக் கூடும்; இதிலே எது--எப்போது நேரிடும் என்று தெரிந்துகொள்ள முடியாது. இவற்றில் எதையும் தடுக்கவும் முடியாது என்றால், கடைவீதி செல்பவனின் கருத்தும் காரியமும் என்ன ஆகும்? இந்நாட்டு மக்களில், பெரும்பான்மையினருக்கு, வாழ்க்கைச் சந்தை இதுபோலவே அமைந்து விடுகிறது.

முயற்சி பலனளிக்காதபோது, திட்டம் தகர்ந்துவிடும் போது, நோக்கம் ஈடேறாதபோது, என் முயற்சி பலிக்கவில்லை; திட்டம் ஏன் வெற்றி பெறவில்லை நமது கணக்கு ஏன் பொய்த்துப் போயிற்று; காரணம் என்ன என்று