பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84


மாறி. யந்திரத்தொழில் முறையும், ஒரு சில பலரை வேலைக்கமர்த்தி, தொழில் நடத்தி, உற்பத்தியைப் பெருக்கி, பண்டங்களை விற்று, இலாபம் பெறுவதுமான முறை வளர்ந்தது. இதனால் ஓரிடத்தில் ஏராளமானவர்கள் கூடித தொழில் செய்யும் முறையும், அந்தத் தொழிலில் இலாபம் தங்களுக்குக் கிடைக்கும் கூவிபோக மீதமிருக்கும் பகுதி வேறிடம் போவதும், தொழிலாளர்களுக்கு விளங்கலாயீற்று. இந்த விழிப்புணர்ச்சி ஏற்பட்டதும், தொழிலாளர்கள், முதலில் தங்கள் விதி, வினை, முதலாளிகளின் புண்ணியம், ஆகியவற்றைப்பற்றி எண்ணி. தங்கள் மனதுக்கு ஆறுதலைத் தேடிக் கொண்டதுடன், தங்களுக்கும், பயபக்தியுடன் நடந்துவந்தால், ஆண்டவனின் அருள் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தனர். சிலர் தங்கள் காய்ந்த வயிற்றையும், கடமை உணர்ச்சியுடன் தாங்கள் பாடுபடுவதையும் எடுத்துக்காட்டி, தொழில் அமைத்தவர்களின் நல்லுணர்ச்சிக்கும். தயாள குணத்துக்கும் மனுப் போட்டு. அதனால் தங்கள் குறைகளைத் தீர்த்துக்கொள்ள முயன்றனர். இந்த முறை நெடுநாட்களுக்குப் பயன்தரவில்லை. சிலருடைய தயாள குணத்தினால், ஒரு பெரிய கூட்டத்தில் வளர்ந்துவரும் தொல்லைகளைப் போக்கிவிட முடியாது. இதனால் தொழிலாளர்களின் வாழ்க்கையிலேயும், குறிப்பிடத் தக்க வளம் உண்டாகவில்லை. வறுமை கொட்டலாயிற்று. வாட்டம் அதிகரித்தது. அபே போது, தொழில் முறைமாறி, பண்ட உற்பத்தி அதிகரித்து, செல்வம் கொழித்தால் வாழ்க்கை வசதிகள் அதிகமாகி நாகரிகம் மேலோங்கி விட்டது. நாகரிகத்தின் முழுப்பயனை ஒரு சிலர் அடைய அந்த நாகரிகத்தின் அடிப்படைக்கு அரணாக அமைந்திருந்த பெரும்பாலானவர்கள் அந்த நாகரிகத்தின் பயனை அனுபவிக்காமலிருந்தபோது அவர்கள் மனதிலே ஓர் அதிர்ச்சி ஓர் குமுறல் ஏற்பட்டது