பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92


லாம். ஸ்தாபனத்தின் மூலக் கருத்துக்கே முதலிடம் தரப்படவேண்டும். அப்போதுதான் ஸ்தாபனம் சிதையாமலிருக்கும்--ஸ்தாபன ஐக்கியம் ஒருமுறை பாடுபட்டுச் சாதித்துவிட்டு, அதைக் கண்டு சந்தோஷப்பட்டுக்கொண்டு இனிக் கவலையில்லை என்று இருந்துவிடக்கூடிய ஒரு சம்பவமல்ல--எப்போதும் விழிப்போடு இருந்துகொண்டு அவ்வப்போது பழுது பார்த்துக்கொண்டு எந்தச் சமயத்திலும் மூலக்கருத்து கெடாதபடியும் கவனித்துக்கொண்டு இருந்தால் மட்டுமே காப்பாற்றக்கூடிய, ஓர் அற்புதமான ஜீவசக்தி, ஸ்தாபனத்தின் பலமும் பயனும், அந்த ஐக்கியத்தை--ஒற்றுமை உணர்ச்சியைப் பொறுத்தே இருக்கிறது. வீணை உயர்தரமானதால், வித்துவானும் தேர்ந்தவர்தான். ஆனால் ஒரு நரம்புமட்டும் ஓரிடத்தில் தளர்ந்து இருக்கிறது என்றால், வீணையின் நாதமும் கெடும்; வித்துவானின் இசையும் பாழ்படும். ஸ்தாபனத்தின் ஐக்கியம் சங்கீதத்துக்கு உள்ள சுருதி முானத்தைப் போன்றது--மிக மிக ஜாக்கிரதையாகக் கவனிக்கடவேண்டிய விஷயம்.