பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97


பார்க்க, அப்போது வாங்கினோம் இந்த இரத்தின ஐமக்காளத்தை. கார்த்திகை தீபத்தின்போது திருவண்ணாமலையில் வாங்கினோம். சிதம்பரத்திலே ஆருத்திரா தரிசனத்தின்போது திருவண்ணாமலையில் வாங்கினோம், சிதம்பரத்திலே ஆருத்திரா தரிசனத்தின்போது இதை வாங்கினோம் என்று நமது வீடுகளில் பல சாமான்களைக் காட்டுவர். சாமான் ஒவ்சவான்றுக்கும் ஒரு சரித்திரமே கூறுவார்கள். ஆனால் பத்து நல்ல புத்தகங்களைக் காட்டி இன்ன சந்தர்ப்பத்தில் இவைகளை வாங்கினோம் என்று கூற மாட்டார்கள்.

வீட்டில் அலங்காரத்தையும், விசேஷ கால உபயோகத்திற்கான சாதனங்களையும் கவனிப்பதுபோல, வீட்டிற்கோர் புத்தகசாலை. சிறிய அளவிலானது அமைக்க நிச்சயமாகக் கவனம் செலுத்தவேண்டும். அக்கறை காட்ட வேண்டும். அறிவு ஆயுதமாகிவிட்ட நாட்களிலே வாழும் நாம், இனியும் இந்தக் காரியத்தைக் கவனியாதிருப்பது, நாட்டுக்கு மறைமுகமாகச் செய்யும் துரோகச் செயலாகும்.

வீட்டிற்கோர் புத்தகசாலை நிச்சயம் வேண்டும்--வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம், அலங்காரப் பொருள்களுக்கும், போக போக்கியப் பொருள்களுக்கும் தரப்படும் நிலைமாறி, புத்தக சாலைக்கு அந்த இடம் தரப்படவேண்டும். உணவு, உடை, அடிப்படைத் தேவை-- அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும், முதல் இடம், புத்தகசாலைக்குத் தரப்படவேண்டும்.

எவ்வளவு செலவு? ஏது அவ்வளவு பணம் என்று கேட்பர் பலருக்குத் தேவையான அளவு புத்தகம் வாங்கத்தான் முடியாது--அந்தக் குறையைப் போக்க பொது புத்தகசாலைகளை நடத்தி, சர்க்கார், நகரசபைகள், பொது நலக் கழகங்கள் பணிபுரிய வேண்டும். ஆனால் சில அடிப்-

—7