பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கேள்வேந்தன் 125

Yor

உன்னைத் திருத்திக்கொள். அதன் பின்னரே பிறரைத் திருத்தத்குரிய ஆற்றலைப் பெறுவாய். தா

சிறந்த வீரர் போர்க்குணமில்லாதவர். அவர்கள் சினத் தைத் துறந்தவர். போர் செய்யாது பகைவரை வெல்ப வரே தலைசிறந்த வெற்றி பெறுபவர். தா

வேண்டுதல்

எவருடைய பிரார்த்தனை கடவுளர்க்கு இனியது?

பிறர்க்கு ஈவோர், இன்சொல் கூறுவோர், அறநெறி நிற் போர் இவருடையதே. &gT

ஆண்டவனே! நான் உம்மிடம் வேண்டுவது இதுவே. உண்மையை எனக்கு உரைத்தருளும். ஜா

அண்ணலே! அறநெறி நிற்பதற்கான நல்லெண்ணங் களை எண்ணும் ஆற்றலை அருள்வீர். அறத்தின் மூலம் உம்முடன் ஐக்கியமாகும் பேற்றை அருள்வீர். 83m.

ஆண்டவனே, உம்மைப் பணிந்து வேண்டுகின்றேன். தோன்றாத் துணையாக நிற்கும் அண்ணலே, அற நெறியில் நிற்கும் அறிவை எனக்கு அருளும். எல் லோருக்கும் இன்பம் தரும் மார்க்கத்தைக் காட்டும். ஜா

ஒ அஹாரர், நான் வேண்டுவது இதுவே. எல்லா மக்களுக்கும் ஏற்றமுடைய மதத்தை எனக்கு அருளும். உம்மை நாடும் அறிவுடைய ஆசையைத் தருவதும் உண்மையை ஆதாரமாகவுடையதும், நடுவு நிலைமை தவறாததுமான மதத்தை எனக்குக் காட்டி அருளும்.ஜா

கடவுளே, எனக்குத் தூயதான் இதயத்தை அருளும் என்னிடம் அறம் விரும்பும் ஆன்மாவை அமைத் தருளும். - GT