பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளிவிழா வெளியீடு முன்னுரை உயிரினங்களில் உயர்ந்தவன் மனிதன். ஆறறிவு பெற்ற அவன் வாழ்வுப்பாதை நேராக அமைவதில்லை. குறுக்கும் நெடுக்கும், வளைவும் முடுக்கும், மேடும் பள்ளமும், வழுக்கவும் இழுக்கமும் உள்ளதாக அது அமைகின்றது. ஆயினும் அவற்றை யெல்லாம் கடந்து-வென்று அவன் நேரிய வழியில் நடந்து மனிதனாகத் தன்னைக் காட்டிக் கொள்ளக் கடமைப்பட்டவனாகின்றான். அத்தகைய வாழ்வின் நெடும் பயணத்தில் வழித்துணையாக - உதவியாக - உற்ற நண்ப னாகஉதவுவன சான்றோர் வாய்மொழிகளே! இதையே வள்ளுவர். "இழுக்கல் உடையுழிஇ ஊற்றுக் கோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்' என்கிறார், இத்தகைய ஒழுக்கசீலர்-சான்றோர் கூறிய வாய்மொழிகளை வாழும் சமுதாயத்துக்கு அன்றாடம் நின்ைவூட்டிக் கொண்டிருக்கும் வகையில், காலை நிகழ்ச்சி யினை நாள்தோறும் சான்றோர் வாக்குடன் சென்னை வானொலி தொடங்குகின்றது. பல ஆண்டுகளாக நான் அதில் பங்கு கொண்டு பேசிய நிலையில், அவற்றுள் ஒரு சிலவ ற்றை இந்நூலில் பெய்துள்ளேன். எனவே இந்நூலுக்குச் சான்றோர் வாக்கு எனவே பெயரிட்டேன். நான் வானொலியில் பேசிய வேறு சிலவற்றை முன்னமே சிறுவர்களுக்கு' 'வானொலி வழியே', 'நாலும் இரண்டும்’ என்பன போன்ற நூல்களாக வெளியிட்டுள்ளேன். அவற்றின் தொடர்பாக இது அமை கின்றது.