பக்கம்:சிதறல்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 இல்லாமல் எழுதமாட்டார்கள் என்று நினைக்கும் சாதாரண மனிதர்களைப் போலத்தானே அவர் நினைத்து விட்டார். அவர் என்னை மதிக்கும் பொழுது தான் அவரோடு வாழ்வது என்று உறுதி கொண்டு விட்டேன். ஆஷாவின் வாழ்க்கையில் விரக்தியைத் தவிர அவள் வேறு எதையும் காணவில்லை. அடிக்கடி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அவளுக்கு உண்டாகிக் கொண் டிருந்தது.மொத்தத்தில் அவள் வாழ்வில் சுகம்காணவில்லை. அவளுக்கு ஏன் ரவி மீது இவ்வளவு உயிர் என்று என்னுல் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனைப் பார்க்கவே அடிக்கடி கணவனிடம் சண்டை போட்டுக் கெர்ண்டு என் வீட்டுக்கு வந்து விடுகிருள். வேலையை விட்டது பெருந்தவறு என்று அடிக்கடி சொல்கிருள். என் அறிவிலே ஒரு துனியம் குடி கொண்டு விட்டது என்று சொல்கிருள், . அவர் இல்லாமல் நான் வாழ முடியாது என்று நினைத் தேன். இப்பொழுது ஏன் வாழ வேண்டும் என்ற எண்ணம் தான் உண்டாகிறது. அவள் வீட்டுக்கு வருவது எனக்கு ஒரு பெரிய ஆறுதலாக இருந்தது. அவளிடம் இந்த முதல் டிக்கட் டைப் பற்றிப் பேச வேண்டும் என்று துடித்துக் கொண் டிருந்தேன். என்அவர் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் ஏற் பட்டுவிட்டதை அறிந்தேன். அவர் பெரிய பக்திமாகை மாறிவிட்டார் என்று கேள்விப்பட்டேன். அவர் சதா கோயில்களுக்குச் செல்லத்தொடங்கினர். சாமியார் காலட் சேபங்களை விடாமல் கேட்கத் தொடங்கினராம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/101&oldid=825415" இலிருந்து மீள்விக்கப்பட்டது