பக்கம்:சிதறல்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

எனக்கு இந்தச் சமுதாய உணர்வோடு ஒன்றிப் போகப் வேண்டும் என்ற உணர்வு எப்படியோ வளர்ந்து விட்டது. அதற்குக் காரணம் என்ன? தலைவர் காமராசர் தான். என்னை அவர் ஒரு முறை நான் படித்த கல்லூரியில் அன்பு ஊறப் பார்த்தார். கடவுள் வாழ்த்துப் பாடச் சொன்னார். நான் நாட்டு வாழ்த்துப் பாடினேன். அது அவருக்கு வியப்பைத் தந்தது.

"ஏம்மா கடவுள் வாழ்த்துதானே முதலில் பாட வேண்டும் அதுதானே பழக்கம்" என்றார்.

"கடைசியிலே நாட்டுப்பண் பாடுவது எனக்குப் பிடிப்பது இல்லை” என்றேன்.

அது அவருக்கு விளங்கவில்லை. எனக்கு விளங்கியது.

நாட்டு வாழ்த்துக்கு முதலில் இடம் கொடுக்கவேண்டும். நாடுதான் முதல் கடவுள் பின்னால் வைக்கவேண்டும் என்ற உணர்வு என்னுள் ஒடியது.

அது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. "இதை யாருமே இதுவரை சொல்லவே இல்லையே" என்றார்.

நான் ஒன்றும் அப்படிப்பட்ட அறிவாளியல்ல அந்த மேதைக்கு எடுத்துச் சொல்ல; என்றாலும் அவர் என்னைப் பாராட்டியது இன்னும் மறக்க முடியவில்லை.

என் குரல் நன்றாக இருந்தது என்று பாராட்டினர்.

ரொம்ப பேருக்குத் தெரியாது; களிப்படைந்த உள்ளத்தில்தான் இசையும் பிறக்கும். குரல் இனிமை மிகவும் அவசியம். உள்ளத்து இனிமை குரலில்தான் வெளிப்படுகிறது என்பதைப் பல பேரிடம் கவனித்து வந்திருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/14&oldid=1256901" இலிருந்து மீள்விக்கப்பட்டது