பக்கம்:சிதறல்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

வெளியிலே ஆபீசுக்குப் போனால் 'ஹை ஹீல்ஸ்' செருப்பு போட்டுக் கொள்ளலாம். வீட்டிலே எப்படிப் போட்டுக்கொள்வது.

பயங்கரமான ரகசியம் என்று சொன்னேனே அது இதுதான். அவள் ஒருவனை ஆசைப்பட்டாள். எப்படியோ தொடர்பு ஏற்பட்டுவிட்டது. இதைப்போய் அவள் எப்படிச் சொல்லுவாள். அவள் கொஞ்சம் வசதி குறைவு. அந்தக்காலத்திலே டியூஷன் சொல்லித்தான் படிப்பை முடிக்க வேண்டி இருந்தது. அவளுக்கு ஒரே பயம். வயசு எங்கே ஆகிவிடுமோ என்று.

அவள் அதைச் சொல்லவில்லை. எப்படி அதைச் சொல்லுவாள். பின்னால் அந்தப் பாவி அவளை விடவில்லை. அடிக்கடி அவள் பின்னல் சுற்றிக்கொண்டு இருந்தான். ‘ருசி கண்ட பூனை' என்று அவள் அவனைப்பற்றிச் சொல்ல வில்லை. நானாக அப்படி நினைத்துக்கொண்டேன்.

அவனிடமிருந்து தப்புவதற்கு அவளுக்கு வழியே தெரியவில்லை.

அதைப்போல நானும் நடந்துகொள்ள வேண்டும் என்று என் ‘அவர்’ எதிர்பார்க்கிறார். இங்கேதான் எனக்கும் என் அவருக்கும் ஏற்படுகின்ற குழப்பம், நான் என் நண்பரோடு பழகினேன். அது கலை சம்பந்தமானது. அவருக்குத் திரைப்படம் ரொம்பவும் பிடிக்கும். எனக்கும் அதில் ஒற்றுமை. ரெண்டுபேரும் சேர்ந்து போய்ப்பார்த்து இருக்கிறோம்.

அது ஒரு தனி அனுபவம். இந்த உலகத்துக்கு அது விளங்காது.

முதல் முதலிலே இந்தத் தொடர்பு தியேட்டரில்தான் ஏற்பட்டுவிட்டது. எனக்குப் படம் ரிலீசானவுடன் உடனே பார்த்துவிடவேண்டும் என்று ஆசை அதிலே ஒரு நன்மையும் இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/24&oldid=1258285" இலிருந்து மீள்விக்கப்பட்டது