பக்கம்:சிதறல்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

மையாக இருக்கிறேனா என்று தொட்டுப் பார்த்து இருக்கிறார்கள். என் நெஞ்சு மட்டும் வன்மையாகத்தான் இருக்கும். அது அவர்களுக்குத் தெரியாது.

நான் அதை வெறுப்பது இல்லை. அவன் ஏதோ அதில் சுகம் காண்கிறான். அவன் கற்பனையை நாம் ஏன் கெடுக்க வேண்டும் என்று விட்டு விடுவேன். அற்ப சுகத்துக்கு ஆசைப்படும் கற்பனைகளில் அவன் ஈடுபட்டால். நான் என்ன செய்யமுடியும்.

ஆனால் என்னோடு பயணம் செய்யும் என் சினேகிதிகள் சும்மாவாவது அலட்டிக்கொள்வார்கள். "சே இந்த ஆண்களே மோசம்" என்று தீர்மானம் போட்டு நிறை வேற்றிவிடுவார்கள்.

எங்களுக்காகவே இந்த Foot board-ல் தொங்கிக் கொண்டு வருகிறார்கள். எவ்வளவுபேர். அதாவது அந்த நேரத்தில் ஒரே நெருக்கடி. என்னைவிட அழகான பெண்கள் இருப்பார்கள். அவர்களைச் சுற்றி வட்டமிட மாட்டார்கள். ரெம்பவும் அழகாக இருந்தால் அவர்கள் கிட்டே கூட போக மாட்டார்கள். அவள் யாருக்காகவோ ஒதுக்கி வைக்கப்பட்டவள் போலக் காணப்படுவாள். ரொம்பவும் பெரிய வீட்டுப் பெண்ணாகக் காட்சி அளிப்பாள். அவளைத் தனிப்பட்ட பார்வையில் யாரும் பார்க்க முடியாது. சிலதுகள் இருக்கும் எந்த அனுபவமும் பெறாமல் டல்லடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கும்.

அவர்களைப் பற்றி யாருமே கவலைப்படுவதில்லை. எங்களில் ஒருத்தி இருந்தாள் அவள் ரெம்பவும் அழகு என்று கூறமுடியாது அழகு இல்லை என்றும் கூற முடியாது. ஆனால் அந்த முகம் ரொம்பவும் கவர்ச்சியாக இருக்கும். மாநிறம் தான். கண்கள் அழகாக இருக்கும். முகத்தில் அறிவு ஒளிவீசும் அவள் அந்த பஸ்ஸில் இருந்தால் அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/44&oldid=1280538" இலிருந்து மீள்விக்கப்பட்டது