பக்கம்:சிதறல்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

சரி அதுதானே நம்ம நாட்டுக்கும் பெருமையும். பெண்கள் அவ்வளவு எளிமையாக இளைஞர்களுக்குக் கிடைப்பது இல்லை. மாணவர்கள் பொதுவாகத் தன்னடக்கத்தோடு வாழ்கிறார்கள்.

யாரோ சிலர் துணிகரமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் நிறைய உரிமை இருக்கிறது. சில பல்கலைக் கழகங்களில் உடனே குழந்தைகளுக்குத் தாயாகிவிடுகிறர்களாம். அந்தக் குழந்தைகளும் வளர்வதற்கு வேண்டிய வசதிகளும் அமைத்துத் தருகிறார்களாம்.

இங்கே அந்த நிலைக்கு யாரும் போவது இல்லை. இப்படி இருக்கும் போதே எங்களைப் பற்றிச் சில பேர் தவறாகப் பேசுகிறார்கள். அதாவது மொத்தமாக இந்தக் கழுதைகள் சரியாக நடந்து கொள்வதில்லை என்று பேசக் கேட்டிருக்கிறேன்.

அதற்குக் காரணம் என்ன? இந்த பஸ்ஸில் ஏற்படுகிற நெருக்கடிகள்தாம். பாவம் இந்த ஆண்கள் எங்களைச் சுற்றிக் கொண்டு இருப்பதை மற்றவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. ஒன்றும் ஆகிவிடுவது இல்லை.

அப்பொழுதெல்லாம் கூட அந்த முதல் டிக்கட்டு என்னை நெருங்கியதே இல்லை. அதற்கு அவனுக்கு தைரியம் கிடையாது. சும்மா நினைத்துப் பார்க்கிறேன். அவன் என்னை நெருங்கி இருந்தால் பேசாமல் அவனை காதலித்து இருப்பேன். ஏன் தப்பா? என்ன தப்பு. அதாவது கொஞ்சம் புதுமையாக இருந்திருக்கும்.

அந்தப் படங்களிலே ஒரு படம். ரொம்பவும் ஆச்சரியமாக இருந்தது. கம்மியூனிஸ்டு நாட்டுப் படமாக இருந்தாலும் பரவாயில்லை. ஆங்கில நாட்டுப் படம். இங்கிலாந்திலே எடுத்த படமாம். பிரமாதமான கருத்து. 'ராபின்சன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/47&oldid=1280541" இலிருந்து மீள்விக்கப்பட்டது