பக்கம்:சிதறல்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

பக்கத்து வீட்டு அம்மையார் அவளுக்கு ஆறுதல் சொல்கிறாள்.

"என் மகனை எங்காவது போய்த்தொலை என்று சொல்கிறேன். வீட்டில் இருந்து கொண்டு எதுவும் செய்யாமல் சுற்றிச் சுற்றி வந்து தொலைகிறாயே என்று வருந்துகிறேன்" என்று தான்சொல்ல வருவதை எடுத்துக் காட்டுகிறாள்.

இது என் வாழ்வில் கண்ட ஒரு அனுபவம்.

எப்பொழுதுமே ஒரு 'காண்ட்ராஸ்ட் இருந்தால்தான் எதையும் ரசிக்க முடிகிறது என்பது அந்தப் படத்தைக் கொண்டு அறிய முடிந்தது.

அப்பொழுது இருந்தே ஆஷா என்னோடு நெருங்கிப் பழகினாள். அவள் அடிக்கடி இப்பொழுது வந்து ஆறுதல் சொல்கிறாள். எனக்காகக் கண்ணிர் விடுகிற ஜீவன்கள் யாரும் இல்லை அவளைத் தவிர. என்னை ரசித்தவர்கள் பல பேர். என் பிறந்த நாளைக் கொண்டாடியவர்கள் பலபேர். என்னை வைத்துக் காதல் கவிதைகள் புனைந்தவர்கள் எவ்வளவோ பேர். எனக்காகக் கைதட்டி ஆரவாரித்தவர்கள் எவ்வளவோ பேர்.என் சுமையைக் குறைக்க என் கண்ணிரைத் தன் உள்ளத்தில் அழியாச்சித்திரமாக எழுதி வைக்கும் ஒரே தோழி ஆஷாதான். அவள் சென்னைக்கு வரும் பொழுதெல்லாம் என் வீட்டில் தங்காமல் இருக்க மாட்டாள். ரவிக்குக் கூட அவள் வந்தால் ரொம்பவும் பிடிக்கும்.

அவள் இடுப்பை அவன் கரங்கள் சுற்றிக் கொள்ளும். அவள் பால்மாறாமல் வெளியே எடுத்துப் போகத் தயங்க மாட்டாள். அவளுக்கு இன்னும் குழந்தையே பிறக்க வில்லை. எனக்குப் பின்னால் தான் புரிந்து கொள்ள முடிந்தது, அதுவும் ஒரு காரணம். இரண்டு பேர் பிரியாமல் இருப்பதற்கு என்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/62&oldid=1288597" இலிருந்து மீள்விக்கப்பட்டது