பக்கம்:சிதறல்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

‘எங்கே ரவி’ என்ற குரல்.என்னைத் தட்டி எழுப்பியது. அப்பொழுதுதான் மறுபடியும் இந்தஉலகத்துக்கு வந்தேன். என் அறை என் முன் தெரிந்தது. அது இதற்கு முன்னஆல் மிகச்சிறிய அறையாக இருந்தது.அது இப்பொழுது நாவல் பிரச்சனைகளைப்போல் விசுவரூபம் எடுத்துக் காட்டியது. மேஜை,நாற்காலி,சோபாக்கள் இருந்தன.சுவரில் மாட்டப் பட்டிருந்த 'ரவியின் படம்' என் நெஞ்சைத் திடுக்கிடச் செய்தது. அவன் படமாகவே நிற்கமாட்டான். அவன் ஆறடி உயரம் நிச்சயமாக வளர்வான்.

அதற்குள் அவனைப் பிடித்து இழுத்து வந்து நிறுத்தினஆர்கள். குற்றவாளியைக் கூண்டில் நிறுத்துவது போல. அப்படி யாரையும் நான் பார்த்தது இல்லை. நான் கோர்ட்டுக்கும்,நீதிக்கும் ஏன் போகப் போகிறேன்.பள்ளிக் கூடத்து வாத்தியார் முன் முரட்டுப் பையனைக் கொண்டு வந்து நிறுத்திவைப்பார்கள்.மற்ற பையன்களுக்கு எல்லாம் ஒரே ஆவல் அடுத்த நிகழ்ச்சி என்ன? ஆசிரியர் ஆவேசக்காரராக மாறுவார். அந்தப்பையனை அடிப்பதில் அவர் வெறியாட்டம் தொடரும். பையன்கள் அப்பொழுது தான் ரொம்ப சீரியசாகப் பாடம் எழுதிக் கொண்டிருப்பார்கள். அந்த நினைவைத்தான் அந்தச் சுற்றுப்புறம் எனக்கு உண்டாக்கியது.

நான் எந்தப் பள்ளிக்கூடத்து ஆசிரியராகவும் மாறவில்லை. 'எங்கேடா போனே தங்கம்' என்று அவனைச் சேர்த்துக்கட்டி என் கண்ணிரால் அவனைக் குளிப்பாட்டினேன்.

அவன் அழவில்லை சிரித்தான். அவன் சிரித்து அழ வைத்த இந்த நிகழ்ச்சி நான் மறக்க முடியாத ஒன்று. பாட்டி அவனைக் கட்டிப் போட வேண்டும் என்றார்கள். நான் அவனை எவ்வளவு நேரம் கட்டிப் போட முடியும். எனக்கு என்னையும் அறியாமல் சமுதாயச் சிந்தனைகள் வளர்ந்து விட்டன. அந்த நிலையில் என் வாழ்க்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/8&oldid=1255990" இலிருந்து மீள்விக்கப்பட்டது