பக்கம்:சிதறல்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 என்னைக் கவர்ந்து விடுகிறது. அதில் நான் என்னை இழந்து விடுகிறேன்." "பலருக்குப் பல போதைகள் இருக்கின்றன. அதிலே இந்த அழகு உணர்ச்சி என்பது ஒரு போதை. அது என்னிடம் மிகுதியாக இருக்கிறது. இந்த வகையில் கலைஞர் களுக்கு உரிமை கொடுத்துத்தான் தீர வேண்டும். இல்லா விட்டால் இராமகிருஷ்ண விஜயத்துக்குக் கட்டுரைகள் எழுதுவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது" 6T 60! LJR H. - என் வகுப்பில் ஒரு அழகி இருந்தாள். நிச்சயமாக அவள்தான் அவர் உள்ளத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். அவர் கண்கள் எப்பொழுதும் அவளை மவுன மாக ரசித்துக் கொண்டிருக்கும். அவருடைய ஒவ்வொரு அசைவும் அவர் நெஞ்சை அசைத்து இருக்க வேண்டும். எனக்கு ஒரு சந்தேகம் அவரிடம் நான் அடிக்கடிப் பழகியது உண்டு. அந்தப் 'பாவை நானுக இருக்க முடியுமா என்று நினைத்துப் பார்ப்பேன். அதற்காக நான் வருந்தியது இல்லை. அப்படி ஒரு கலைஞனின் பேணுவால் நான் தீட்டப்படுகிறேன் என்ருல் அதற்கு நான் ஏன் கவலைப்பட வேண்டும். "பெண் மகிழ்விக்கலாம்; ஆளுல் மயக்கக் கூடாது" என்று கூறுவார். இந்த நுட்பத்தைப் பின்னல் தான் என்னல் நினைத்துப் பார்க்க முடிந்தது. நான் பலரை மகிழ்வித்து இருப்பேன் ஆனல் மயக்கியது இல்லை. அவர்கள் மயங்கி இருக்கலாம்; ஆனால் நான் மயங்கியது இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/81&oldid=825601" இலிருந்து மீள்விக்கப்பட்டது