பக்கம்:சிதறல்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 யால் அவனை மறைத்து வைப்பேன். அவன் என் மானத்தை அடிக்கடி வாங்கிவிடுவான். நானும் 'அவரிடம் ஒரு புதுவகையான அன்பைக் காட்டினேன். அவர் என் தலைவன் என்ற உணர்வு மேலோங்கி நின்றது. அவரும் தகப்பனுகி விட்டதாகப் பெருமை கொண்டார். அவர் தொழிலகத்தில் இனிப்பு வழங்கினர். அவர் தந்தை யாகிவிட்டதைக் கேட்டு அவரைப் பாராட்டினர்கள். நான் என் ரவியின் தாய் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டேன். அவர் பொறுப்பு மிக்க தந்தையாகக் காட்சி அளித்தார். "இவர் தாண்டா உங்க அப்பா" என்று சொல்லாமல் அவனிடம் சொல்லி வைப்பேன். அவன் திருட்டு முழியோடு அவரை வெட்கத்தோடுபார்ப்பான். அவரிடம் போக மறுத்தான். அவனுக்கு பயம் நான் அவனைவிட்டு விலகி விடுவேனே என்று. ஆஷா சொல்லுவாளே என் கணவனையும் இழக்கத் தயார். எனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று சொல்லு வாளே அது எனக்கு உண்மையாக இல்லை. அவரைத்தான் நான் விரும்பினேன்; இவன் மெல்ல என்னிடம் இடம் கேட்டுப் பிடித்துக் கொண்டான். இப்பொழுது அவனே என்னைச் சுற்றிக் கொண்டான் அவர் என்னை விட்டு விலகி விட்டார். இவர்தான அவர்’ என்று பல நாட்கள் எண்ணியது உண்டு. அன்று நடந்த விபத்து இதுதான். என் முதல் டிக்கட்டு நண்பன் என்னைப்பார்க்க வத்தான். அவன் அந்தக் குழந்தையை அன்பாக எடுத்துக்கொண்டான். அங்கே வந்த நர்சு சும்மா இருக்கக்கூடாதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/83&oldid=825605" இலிருந்து மீள்விக்கப்பட்டது