பக்கம்:சிதறல்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 "நான் தலைமை ஏற்க அழைக்கிறர்கள்' என்பேன். மாணவியாக இருந்தபோது பங்கு ஏற்றேன். எனக்கு இப்பொழுது தலைமைப் பதவி வந்து சேர்ந்துவிட்டது. கவியரங்கத்துக்கு ஒரு கவிமணி வேண்டும் என்பது அவர்கள் ஆசை. அதற்காகத்தான் அவர்கள் என்னை அழைத்தார்கள் என்பேன். அதை அம்மா ஏற்க மறுத்தாள். நீ பெண்மணி அதல்ைதான் உன்னை விரும்புகிருர் கள் என்பாள். உன்னைக் காக்க வேண்டுவது எங்கள் கடமை ஆகிறது. "நீ கணவன் வீட்டுக்குச் செல்; பிறகு கவியரங்கு ஏறு' என்று கட்டளையிடுவாள். எனக்கு வீடு நரகமாகப்பட்டது. நல்ல காலம். வீடு களுக்கு நான்கு சுவர்கள் இருக்கின்றன. எல்லாமே சுவ ராக இருந்தால் எப்படி வெளிவர முடியும். வாசல், சன்னல் கள் இருப்பதால் காற்றேட்டமும் வெளிச்சமும் வரத்தான் செய்கின்றன. என் சினிமா நண்பன் எனக்காகத் தவம் கிடந்தான். அவன் தாடிவேறு வளர்த்துவிட்டான். அவன் தாடி சில சாதாரண மனிதர்களை நினைவு ஊட்டியது. நான் சந்தித்த மனிதர்களுள் ஒருவர் தாடி வளர்த்து இருந்தார். பின்னர் எடுத்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். அதை நினைத்து ஒரு கவிதையை எழுதியிருக்கிறேன். கவிதையில் நகைச் சுவையைப் புகுத்தி ரசித்து இருக்கிறேன். அதை என் கவி தைப் பயித்தியம் ஆசிரியருக்கு அனுப்பி வைத்தேன். அதைப் படித்துவிட்டு அவரும் புது மணப் பெண் ணுக வந்த அவள் வீட்டுப் பார்ட்னரும்' (அப்படித்தான் அவளை வருணிப்பது எனக்கு வழக்கமாகிவிட்டது) விழுந்து விழுந்து சிரித்தார்களாம். அந்தச் சிரிப்பையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/88&oldid=825615" இலிருந்து மீள்விக்கப்பட்டது