பக்கம்:சிதறல்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 என்ற கவிதையை என் நாளேட்டில் எழுதி வைத்தேன். இந்தப் புது உறவு எங்கள் வீட்டில் புகுந்தது. எனக் கும் பொழுது போவது அரிதாகிவிட்டது. என் தங்கை யைப்போல எனக்கு வீட்டு வேலைகளில் மனம் செல்வ தில்லை. அப்படிச் சென்ருல் என் கற்பனைக்கு வேலை இல் லாமல் போய்விட்டு இருக்கும். நான் எதிர்காலத்தைப் பற்றிச் சில சிந்திப்பேன், அதை நின்ைத்தால்தான் எனக்கு ஒரே வேதனையாக இருக்கும். பெண்ணுரிமை பற்றிப் பேசிய நான் என்னுரிமை யைக் காக்கமுடியாமல் போய்விட்டது. பள்ளி நாட்களில் துள்ளி விளையாடினேன்; மேற்படிப்பில் என் மேல் மாசு கள் படிந்தன, சின்னச் சின்ன அனுபவங்களை அழகு படுத்தி அவற்றிற்குச் சாகாவரம் தந்தேன். அவைதாம் என் கவிதைகள். பிறர் எழுதிய கவிதைகள். மேடைப் பேச்சுப் பேசிய நான் சாதாரண வீட்டுப் பெண்ணுக அடங்கிக் கிடக்க வேண்டும் என்று என் தாய் எதிர்பார்க்கிருள். வீட்டு வாழ்க்கை இன்னது என்பதைக் கண்டுவிட்ட நான் நாட்டு வாழ்க்கையில் ஆர்வம் காட்டி னேன். பாட்டுப் பறவையாக வாழ்ந்த நான் கூட்டுக் கிளி யாக எப்படி அடங்கி வாழமுடியும்?. நிச்சயம் எனக்கு ஒரு வேலை தேவைப்பட்டது. பாட்டி எழுதி வைத்த சொத்து எனக்கு முதல் தேவையைப் பூர்த்தி செய்தது. வறுமையின் பிடியில் என் பெருமை அழியத் தேவை இல்லை. ஆனல் அதுவே என் வெளியுலக முயற்சி யைக் குறைத்தது. என்னுடன் படித்த பெண் ஒருத்தி அவளுக்குக் கிடைத்த உரிமை எனக்குக் கிடைக்கவில்லை. மாதம் முன்னூறுதான் ஈட்டிள்ை. அவள் ஒரு ஸ்டெனே. அதாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/91&oldid=825624" இலிருந்து மீள்விக்கப்பட்டது