பக்கம்:சித்தி வேழம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் அமுகு 127 “என்னுடைய முயற்சியினல் முருகப்பெருமானுடைய காட்சியை நான் கண்டேன் இல்லை. அவன் தன் திருவருளால் ஆட்கொள்ள எண்ணினன். வேறு எந்த வகையிலுைம் என்பால் அருள்பாலிக்க ஒண்ணுது என்றல்லவா அமருக்கு நண்ணினுன். இதுதான் அவனுடைய பேரருள் என்று நாட்டலாம்' என்கிருன், "நான் அவனேக் காணவேண்டு மென்று கினைக்கவில்லை. தன்னே எனக்குக் காட்டவேண்டு மென்று அவன் உறுதியாக நினைத்தான். அவன் உள்ள இடத்திற்கு நான் போகவில்லை ; நான் உள்ள இடத்திற்கு அவன் வந்தான். போர்க்களத்தைக் கோயிலாக்கி, போரைத் தரிசனம் ஆக்கி, ப்கைவன் இவன் என்ற உணர்வுடன் வாரா மல், எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று வந்திருக்கிருன். போரை வியாஜமாகக் கொண்டு எனக்குக் காட்சிதர வந்தானே' "நண்ணிஞன் அமருக் கென் கை அருளென நாட்ட லாமே? என்று கூறுகிருன். பின்பு அந்தப் பெருமானப் போப் அடைந்து காலில் விழவேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. இறைவன் சிறிது திரையைப் போட்டவுடன், 'மானம் தடுக்கிறது" என்று சொல்லி மீட்டும் போர் செய்கிருன். குறுகிய காலத் திற்குள் அவனே அடர்த்து வேலால் சூரத்துவத்தைப் போக்கி மயிலாகவும் சேவலாகவும் ஆக்கிக் கொள்கிருன் முருகன். அகங்கார மமகாரப் பிழம்பாகிய சூரபன்மாவைக்கூட வசப்படுத்தி, உள்ளம் உருகும்படியாகச் செய்தது முருகப் பெருமானது பேரழகு. பகைவகிைய சூரபன்மனே இந்த அழகைக் கண்டு வேறு யாரும் சொல்ல முடியாத அளவில் பாராட்டியுள்ளான். - முருகப் பெருமான் உண்மையான பேரழகு உடைய வன். அந்த அழகைப் பகைவகிைய குரனே பாராட்டுகிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/133&oldid=825734" இலிருந்து மீள்விக்கப்பட்டது