பக்கம்:சித்தி வேழம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 சித்தி வேழம் முருகன். இது இயற்கையான மலேயைப் பிளந்த திரு விளையாடல். - - . கிரெளஞ்ச மலைக்குள் ஒளிந்துகொண்டு மாயம் செய் தான் சூரபன்மன். கிரெளஞ்ச மலையைக் குத்திச் சென்ற வேல் சூரபன்மனுடைய மார்பையும் குத்திப் பிளந்தது. அந்த அசுரனுடைய நெஞ்சு உள்ளும் புறமும் கல்லேப் போன்றது: மலேயைப்போலக் கடினமானது: ஈரமற்றது. அதையும் துளைத்துப் பிளந்தது முருகனது மறங்குலவு வேல். இது உருவக மலேயைப் பிளந்த திருவிளையாடல். - கார்வத்து v ங்குசிை கப் பொருப்பும்சூர் م ع உரப்பொருப்பும் பிளப்ப. - ★ இவற்ருேடு இரண்டு தழல்கள் மூண்டனவாம். முருகன் வேள்வியைக் காப்பாற்றும் அருளேயுடையவன். - "அந்தண்மறை வேள்வி காவற்கார' என்று அருணகிரி முனிவர் பாடுவார். "ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்விஒர்க் கும்மே” என்பது திருமுருகாற்றுப்படை. . . . - வேள்வி செய்து அமரர்களுக்கு அவியை அளிப்பது அந்தணர் தொழில். வேள்வியால் அவியுணவு பெறும் தேவரை, "அவியுணவின் ஆன்ருேர்' என்று கூறுவார் வள்ளுவர். அவர்களுடைய உணவைத் தட்டிப் பறிக்கக் காத்திருப்பவர் அசுரர்கள். தேவர்களுக்கும் அவுணர்களுக்கும் பகையாதலால் தேவர்கள் உணவுபெறும் வேள்விகளைக் குலேக்க அசுரர் முந்துவர். விசுவாமித்திர முனிவன் செய்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/138&oldid=825739" இலிருந்து மீள்விக்கப்பட்டது