பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 137 புல்லாங்குழல்! ஆற்றுப் பக்க மிருந்து காற்று பாடும் பாட்டோ? காணாமலே கேட்குது புல்லாங்குழல்: கண்ணன் என்னும் தெய்வ மன்னன் ஊதிய புல்லாங்குழல் நேற்று போல இன்றும் ஆற்றுப் பக்க மிருந்தே காணாமலே ஊதுது புல்லாங்குழல்! காடு மலைகள் கடந்தே பாடும் பூவோ புல்லாங்குழல்? ஆற்றுப் பக்க மிருந்தே சோற்றைத் தின்ற நிறைவில் மாட்டுக் கார நீலன்தான் மகிழ்ந்தே ஊதும் புல்லாங்குழல்! . மனதைத் தழுவும் புல்லாங்குழல்! நேற்றுப் போல இன்றும் இன்று போல நாளையும் நெகிழ வைக்கும் புல்லாங்குழல்! நினைவில் நிற்கும் புல்லாங்குழல் நெஞ்சில் நிறையும் புல்லாங்குழல்