பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

941 வயலூர் சண்முகம் கார்த்திகை நல்ல கார்த்திகையாம்! - பகைக் காரிருள் தொலைத்திடும் கார்த்திகையாம்! சீர்த்தியுறு மிந்தக் கார்த்திகையில் - முருகன் சேவடி வணங்கி ஆர்த்திடுவோம்! சரவணப் பொய்கையில் பிறந்தவனை - தமிழ் தந்தவனைத் தொழுதே சிறந்திடுவோம்! பரவிப் பெருகுது புத்தொளிதான்! - இன்பப் பண்ணி சைக்குது சித்த மெலாம்! சொக்குப் பனைகள் கொளுத்திடுவோம்! - புது ஜோதி கண்டு களித்திடுவோம்! மக்களெலாம் மகிழ்ந் தாடிடுவோம்! - சக்தி மைந்தன் பெரும்புகழ் பாடிடுவோம்!