பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 சிறந்த சொற்பொழிவுகள்

செல்வரின் கொடைப் பொருள் ஊரபிமானம், சாதி அபிமானம் இவற்றைப் பொறுத்தது. புலவர்கள் கொடைப்பொருள் எல்லா நாட்டிற்கும் எல்லாச் சாதிக்கும் பயன்படும். புலவர்களைப் போற்றினால் அவர் காலத்து மக்கள் நற்பயன் உறுவதோடு அவர்களுக்குப் பின்வரும் மக்களும் இறவாத இன்பம் பெறுவார்கள்.

மெய்யன்பர்களே! பாதுகவி சுவாமிகள் என்பவர்களை நான் நன்கு அறிவேன். சிறந்த நூலாசிரியரும், உரையாசிரியரும், சொற்பொழி வாளருமாக அவர் காலத்தில் திகழ்ந்தவர். மதி, பாநுகவி என்னும் தம் பெயருக்கேற்ப (மதி = சந்திரன், பாது = சூரியன்; கவி = சுக்கிரன். இம் மூன்றும் அழுக்கில்லா வெண் கிரணங்கள்) களங்கமில்லாத் தமிழறிஞராக விளங்கினார்கள். அவர் எழுதிய ஹரிஹர தார தம்மியம், கந்தபுராணக் கலாபூஷண உரை என்னும் நூல்களால் சிறந்த உரையாசிரியர் எனவும், திருமாற்பேற்றுப் புராணம் முதலிய நூல்களால் உயர்ந்த நூலாசிரியர் எனவும், ஆற்றிய அரிய சொற்பொழிவுகளால் நல்ல பிரசங்கி எனவும் அறிந்துகொண்டேன்.

இப்பெரியாரின் பெயரால் கழகமொன்று நன்முறையில் இயங்குவது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்மக்கள் யாவரும் ஆதரவு தந்து இதுபோன்ற கழகங்களைப் போற்றி நன்மை யெய்துதல் சாலவும் நன்று.

பாதுகவி மாணவர் கழகப் பன்னிரண்டாவது ஆண்டு விழா உரை (இதழ் : தமிழணங்கு, மலர் 2, இதழ் - 3)