பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜி. டி. நாயுடு 1 +3

இன்று வரை பல நாடுகளிலுள்ள மக்களும் பலவிதமாகப் பாம்பைப் பூசித்து வருகிறார்கள். வாசுகி என்ற பாம்பைக் கொண்டு திருப்பாற்கடலில், அமுதத்தைத் திரட்டியதாக ஒரு கதை வழங்கப்பட்டு வருகிறது.

ஆயிரம் தலைகளையுடைய பாம்பாகிய ஆதிசேடன் பூமியைத் தாங்கி வருவதாகவும், ஓர் புராணக் கதை உண்டு. கிருஷ்ண பகவான் காளிங்கன் என்ற பாம்பின்மேல் நடனம் செய்ததாகவும் பாகவதக் கதை ஒன்றுண்டு.

புத்தர் கொடிய பாம்பு ஒன்றின் கோபத்தை அடக்கியதாகவும் ஒர் கதை உண்டு. இதைப் போன்ற கதைகள் பல பலவிதமாக வழங்கி வருகின்றன.

கிறிஸ்துவ நூலான பைபிளில் சாத்தான் பாம்பின் வடிவெடுத்து எவாளை மயக்கியதாகக் கூறப்பட்டிருக்கிறது. பாம்பைப் பூசிப்பதை நமது நாட்டில், எங்கும் காணலாம். பாம்புகள் வசித்துவரும் கறையான் புற்றுக்குப் பால் வார்க்கும் விசேட பூசைகள் செய்வதும் அதிகமாகக் காணப்படுகின்றன.

பாம்பு, ஊருகின்ற பிராணி வகைகளில் ஒன்று. ஊருகின்ற பிராணி வகைகளில் நான்கு வகைகள் உண்டு. அவைகள், லிசர்டஸ் என்னும் ஒணான், பல்லி வகைகள், ஒபிலியா (ophelia) என்னும் பாம்பு வகை, குரோகோடிலியா என்னும் முதலை வகை ஆக நான்கு" வகைகளாகும். இந்நான்கு வகைகளும் அமைப்பில் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இப்படியிருக்க, அவைகளை எல்லாம் விட்டுவிட்டுப் பாம்புக்கு மட்டும் ஏன் பூசை செய்கிறார்கள் என்றால், இது வேதகாலம் முதல் தொடங்கிய மூடப்பழக்கமாகும். பழக்கத்துக்கு அடிமைப்பட்ட மக்கள் அதையே தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்கள். அதனால் ஏற்படும் நன்மை தீமைகள் என்னவென்று யாரும் எண்ணிக்கூடப் பார்ப்பதில்லை. . . . . - -

"பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்” என்ற ஒரு பழமொழி வழங்கி வருகிறது. இதுவே பாம்புகளின் பெருமைக்குக் காரணம். பாம்பினால் கடியுண்டு இறக்கின்றவர்கள் நம்நாட்டில் ஆண்டு ஒன்றுக்குச் சுமார் 10 ஆயிரம் பேர்கள். இவ்வளவு பேர்கள் பாம்பு கடித்து இறந்து போவதனால்தான் பாம்புக்குப் பூசை செய்வதையும், பால் ஊற்றுவதையும், அதனைக் கடவுளுக்குக் காவலாக வைப்பதையும் தொழிலாகக் கொண்டுள்ளார்கள். -