பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேலம் பகடாலு நரசிம்மலு நாயடு 21

பத்திராதிபர்களுக் கிருக்கும் கஷ்ட நஷ்டுரங்களைப் பாருங்கள். நமது கண்மணிகளாகிய மிஸ்டர் சுப்பிரமணிய ஐயரும், மிஸ்டர் வீரராகவா சாரியரும் ஆதியில் இப்பத்திரிகைத் தொழிலில் பிரவேசிக்காமல், ரெவினியூ சிவில் உத்தியோகங்களில் பிரவேசித்திருந்தால், டிப்டி கலெக்டர், சப் ஜட்ஜி முதலான வேலைகளில் அமர்ந்து இப்போது பென்ஷன் பெற்றுக்கொண்டு சுகமாக உண்டு, சோபாக்களில் தூங்கி, சாயந்திரங்களில் சமுத்திரக்கரையோரங்களில் லாண்டோ புருவம் வண்டிகளில் ஏறிப்போய் காலம் கழிக்கலாம். தேசாபிமானத்துக்கு உழைத்த இந்த உத்தமர்களுக்கு விருத்த வயதில் பென்ஷன் கொடுத்துக் காப்பவர் யார்? கடவுள்தான் காக்க வேண்டும்.

கனவான்களே! இவர்கள் விஷயமாக நான் இவ்வளவு தூரம் சொன்னது தாகூணியத்தைக் கருதியல்ல. இந்த இந்து பத்திரிகைக்கு முன் நான் சேலத்தில் சுதேசாபிமான பத்திரிகையை ஸ்தாபித்து நஷ்டமடைந்ததில் அப்பத்திரிகை மறைந்தது. பிறகு 1881ஆம் வருஷம் கலாநிதிப் பத்திரிகையை ஸ்தாபித்து வந்ததில் நாளது வரையில் 7000 ரூபாய் நஷ்டமடைந்திருக்கிறேன். இத்துடன் எனக்கு எடிடர் சம்பளமும் சேர்த்தால் 10000 ரூபாய் நஷ்டமிருக்கும்.

இப்படி ஒரு பத்திரிகைக்கே சென்ற 20 வருஷத்தில் இவ்வளவு நஷ்டமானால் இந்துவைப் போன்ற தினசரிப் பெரிய பத்திரிகைக்கு எவ்வளவு நஷ்டமுண்டாயிருக்க வேண்டுமென்பது சமாசாரப் பத்திரிகைகளைப் பதித்து அவற்றுடன் ஊடாடி உறவாடியவர்களுக்கே உண்மை வெளியாகும். இப்படிப் பத்திராதிபர் நஷ்டமடைவதற்குக் கையொப்பக்காரர்களே காரணம்.

நம்முடைய தேசாபிமானம் வாசானகங்கரியம் சோதிப்போமாகில் நம்மவர் நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டால் மூலைக்கொன்றாக ஒடும் தன்மையைப் போன்றவர்கள். அப்படி ஒடும் ஒரு நெல்லிக்காயை எடுத்துப் பார்த்தால் அதைச் சுற்றிலும் ஆறு கோடுகளிருக்கக் காணலாம். அக்கோடுகளென்ன வென்றால், சைவம், வைணவாதி ஆறு சமயங்களுக்கு உவமையாகும்.

எப்படி ஆறு சமயத்தார் ஒன்றாகச் சேருகிறதில்லையோ அப்படியே பொதுவிஷயத்தில் நம்மவர்கள் ஒன்று சேர்வது அபூர்வம். ஆகவே அன்று பார்த்ததற்கு அழிவில்லாமல் இப்போது மிருக்கிறோம். இனி இப்படி இருந்தால் நமது தேசம் கூேடிமமடைவதெப்படி? இத்தியாதிகளை இனிமேலாகிலும் ஆழ நீள ஆராய்ந்து ஆரிய தேசமாகிய நமது அருமைத்