பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேலம் பகடாலு நரசிம்மலு நாயடு 25

விளங்கி, நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, புறநானூறு, ஐங்குறு நூறு எழுபது பரிபாடல், பதிற்றுப் பத்து, நூற்றைம்பது, கூத்தவரி, சிற்றிசை, பேரிசை முதலியனவற்றை அரங்கேற்றினார்கள். இப்படி முதற்சங்கத்தில் 4449 பெயரும், இடைச் சங்கத்தில் 3700 பெயரும், கடைச் சங்கத்தில் 49 பெயரும், அவ்வச் சங்கத்தில் தத்தம் காவியங்களை அரங்கேற்றினர் என்பது இதனடியிற் காணும் இறையனார் அகப்பொருளின் கவியால் விளங்கும்.

வெண்பா

ஏழேழொ டைஞ்நூறு மேழே ழுொடுபஃதும் ஏழேழுஞ் சங்க மேதியனார் - ஏழேழ்சேர் நாற்பதிநா னுாறு முப்பானேழ் நூறுநானூற்று நாற்பதினொன் பான்கவிஞர் நாடு.

இப்படிப் பிரகாசித்த சங்கங்களில் முதற் சங்கத்தின் காலம் முன்பின் 450 என்றும், இடைச் சங்கத்தின் காலம் 350 என்றும், மூன்றாம் சங்கத்தின் காலம் 2000 என்றும் ஒரு நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.

அன்றியும், முதற்சங்கம் காய்சின வழுதி முதல் கடுங்கோன் வழுதி வரையில் 19 பாண்டியர் காலம் வரையினும், இடைச்சங்கம் வெண்டோச்சநியன் முதல் முடத்திருமாற னிறாக 59 பாண்டியர் காலம் வரையினும், மூன்றாஞ்சங்கம் முடத்திருமாறன் முதல் உக்கிரப்பெருவழுதி யிறாக 49 பாண்டியர் காலம் வரையிலும், பிரபலப்பட்டிருந்த தன்றியில், இப்பாண்டியரில் முதற்சங்கத்தில் ஏழுபெயரும், இடைச்சங்கத்தில் ஐவரும், மூன்றாம் சங்கத்தில் மூவரும், கவியரங்கேறினதாக ஒரு சாசனத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. . : ... . . . "

சங்கத்துள் அரங்கேற்றியவற்றுள் திருக்குறளே கடைசியாம். சுமார் 2000 வருஷங்களுக்கு முன்பு அதாவது உக்கிரப் பெருவழுதி காலத்தில் சங்கம் முடிய ஹேதுவாயிற்று. அதற்குக் காரணம், திருக்குறள் இயற்றிய திருவள்ளுவ நாயனார் ஜாதியில் வள்ளுவராகையால் அப்படிப்பட்ட கீழ் ஜாதியான் இயற்றிய திருக்குறளைச் சங்கப் பலகையின் மீதேற்றியது குற்றமெனக் கொண்ட அக்காலத்துப் பிராமணருக்குள் துர்பிமானம் பிறந்து இத்தமிழ்ச் சங்கத்தையும் அச் சங்கப் பலகையையும் பாழ்த்துப் போகச் செய்துவிட்டனரென்று Doctor Colledwell சாஸ்திரி யார் தன் சரித்திரத்தில் சொல்லியிருக்கிறார்.

அதன்பின் 200 வருஷங்கள் வரையில் GಆT சோழ பாண்டியர் காலத்தில் அதிவீரராமன், ஒளவை, புகழேந்தி, ஒட்டக் கூத்தர், கபிலர்,