பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சிறந்த சொற்பொழிவுகள்

பொருந்தும். சிவாலயத்திற்கு முன்னால் இருந்து நந்தனார் கைகூப்பித்தொழும்போது பக்திவெள்ளத்தினால் இயற்கையாகவே பண்ணும் பாட்டும் ஊற்றெடுத்துப் பெருகுவது போலப் பெருகும். அவ்விடத்தில் பக்திரசமான பாட்டுக்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பாடக்கூடும். அதைவிட்டு, நந்தனார் வேதியரிடத்தில் உத்தரவு கேட்பதும் வேதியர் அவருக்கு விடை கொடுப்பதும் பாட்டாகப் பாடினால் நாமும் நம் நாட்டு நாடகநிலை இன்னும் இப்படி இருக்கிறதே என்று ஒப்பாரிப் பாடிப் புலம்ப வேண்டியிருக்கிறது.

நந்தனார் சரித்திரமட்டும் இப்படி நடிப்பதாக நான் சொல்லவில்லை. அநேக நாடக சபைகளில் 'எல்லப்பச் செட்டி லெக்க எகலெக்க' என்றபடி எல்லா நாடகங்களும் இவ்விதமாகத்தான் நடிக்கப்படுகின்றன. தடுக்கம் 'ஸ்பெஷல்' என்று விளம்பரம் செய்யும் நாடக சபைகள் எத்தனையோ இருக்கின்றன. இவ்விதமான குறைகளை நீக்குவதற்கு தனலட்சுமி விலாச சபையாரைப் போன்ற சில கெளரவ சபையார் முன்வந்திருப்பது நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு நற்குறியாகும்.

இத்தகைய சபையார்கள் மேல்நாட்டு நாடகங்களைப் பின்பற்றிச் செய்யக்கூடிய சீர்திருத்தங்கள் பல உள. அவற்றுள் முக்கியமானது கால இயல்புக்கு ஏற்றவாறு ஜனங்கள் திருந்தி வாழக்கூடிய விதமாக நல்ல ஆசிரியரைக் கொண்டு பல நவீன நாடகங்கள் இயற்றி அவற்றை இயற்கைக்கு மாறாகாதபடி நடித்துக் காட்டுவதேயாகும்.

'பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பது பழமொழியாதலால், நமது புராணேதிகாசக் கதைகள் எவ்வளவுதான் அருமையுடையனவாய் இருந்தபோதிலும் திரும்பத் திரும்ப அவைகளையே பார்ப்பது சிலர்க்குச் சலிப்பாகத் தோன்றக்கூடும். அதுவுமல்லாமல் நமது முன்னோர்கள் தேடி வைத்த பொருளையே அநுபவித்துக் கொண்டு நம்முடைய முயற்சியால் புதுப்பொருள் ஏதும் தேடாமல் இருப்பது நமது ஆண்மைக்கும் பெருமைக்கும் பழுதாகும். ஆகையால், பழைய நாடகங்களோடு புதிய நாடகங்களும் சில இயற்றி நடித்தல் வேண்டும். -

இதுகாறும் கூறியதிலிருந்து நாடகத்தால் நாகரிகம் சிறக்கு மென்பதும், நாடகத்தின் தன்மை இத்தகைய தென்பதும், நாடகத்தால் மனம் திருந்தும் வகை இவ்வாறு என்பதும், தற்கால நாடகங்களில்