பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. நமச்சிவாய முதலியார் 41

சமரச சன்மர்க்க சங்கத்தைச் சார்ந்த அன்பர்காள்! திருவருட் பிரகாச வள்ளலாராகிய சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள் திருவடித் தாமரைகட்கு மெய்யன்பு பூண்டொழுகும் தொண்டர்காள் ! உங்கள் அனைவோர்க்கும் அடியேன் செய்துகொள்ளும் விண்ணப்பமாவது:

வடலூர் என்னும் இத்தெய்வத் திருப்பதிக்கண் இன்று நடைபெறும் இம்மகா சபைக்கு அடியேனைத் தலைமை வகிக்குமாறு நியமித்த நுமது பெருந்தகைமைக்கு அடியேன் முதற்கண் மனமார்ந்த வந்தனம் செலுத்து கின்றேன். இன்று இம் மகாசபையைத் திறந் துதவி நம்மனோர்க்கு வழி காட்டி நம் கருத்துக்கள் வாய்ப்பச் செய்த பேரறிவாளராகிய சர். டி. சதாசிவ ஐயர் அவர்கட்கும் என் அன்பார்ந்த வந்தனத்தைச் செலுத்தி, அப்பெரியாரை வாயார வாழ்த்துகின்றேன்.

சென்னை இராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க்க சங்கத்துக் காரியதரிசியும், இம்மகாநாட்டின் வரவேற்புக் கழகத்தின் தலைவரும் ஆகிய சாம்பசிவ முதலியார் அவர்களும், மற்றுஞ் சில அன்பர்களும் அறிவு ஆற்றல்களில் ஆற்றவும் சிறியேனாகிய அடியேனை இம்மகா சபைக்குத் தலைமை வகிக்குமாறு கேட்ட காலத்தே, என் சிறுமையினையும் இம்மகாநாட்டின் பெருமையினையும் உணர்ந்து என் மனமே என்னை இசைய வொட்டாது தடுத்ததாயினும், சதாசிவமும் சாம்பசிவமும் சமரச சன்மார்க்க சங்கமும் என்பால் துணை நின்று உதவி புரியும் என்னுந் துணிவு தூண்டியதனால், அதற்கு உடன்பட ஒருவாறு ஒருப்பட்டேன்.

ஒருவன் தனக்கு வரும் சிறுமை பெருமைகளைக் கருதாது நன்முயற்சிக்கண் தலையிட்டுக் கொள்ளுதல் தக்கதேயாம் என்னும் ஆன்றோர் கருத்தும் என் மனத்தில் தோன்றி என்னை ஊக்கி நின்றது. அன்பர்காள், நந்தம் தமிழகத்தே தொன்று தொட்டு வழங்கி வரும் வரலாறுகளை ஆதரவோடு ஆராய்ந்து பார்ப்பவர்க்குக் காலந்தான் கடவுளோ, கடவுள்தான் காலமோ எனக் கருதுவதற்குப் பெரிதும் இடமுண்டாகும். அஃது யாதோ எனின், பண்டைக் காலத்தே மாந்தர்கள் தம் எண்ணங்கள் கைகூடுமாறு எண்ணித் தொழுதலும் கடவுளர் அவர்கட்குக் கண்கூடாக வந்து நின்று வரமளித்துச் சென்றனர் என்று வழங்கும் வரலாறுகள் எண்ணிறந்தனவாம். -

நம் நாட்டில் தமிழ்மொழியின் பண்டைநாள் வரலாற்றைப் பாகுபடுத்து நாடுங்கால், அகத்தியனார் தென்னாடு போந்து தமிழ்மொழியைப் பயின்று தலைச் சங்கத்தைத் தாபித்த கங்லமே தொடக்கமானதாகத் தோன்றும். அக்காலத்தே திரிபுர மெரித்த விரிசடைக் கடவுளும், குன்றமெறிந்த முருகவேளும் முன்னின்று அருள்