பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. நமச்சிவாய முதலியார் 45

நந்தம் வள்ளலார் தாய் மொழியாகிய தமிழ்மொழியைத் தம் உயிரினுஞ் சிறந்த உயர்மொழியாகக் கொண்டு போற்றி வந்தனர் என்பது அன்னார் எழுதியருளிய தமிழ் என்னும் கட்டுரையே காட்டுமன்றே:

தமிழ்மக்களே, வள்ளலார் மேற்கொண்ட வண்டமிழ் மொழியை வளர்மின், வாழ்த்து மின், அத் தெய்வ மொழி தளர்வடையாது தழைத்தோங்கச் செய்மின், அருட்பா முதலிய அருமறை நூல்களைப் படிமின், பாடுமின்.

வள்ளலார் சமரச சன்மார்க்கம் உலகெங்கும் ஓங்கி வளர உள்ளங் கொண்டனர். சாதி சமய வேறுபாடுகளைக் கருதாது மெய்யன்பு பாராட்டிச் சார்ந்து ஒழுகுதலே சமரசமாம். அத்தகைய சமரசம் கைவர ஒழுகுதலே சன்மார்க்கமாகும். இந்நிலையை மெய்ந்நிலையாகக் கொண்டு ஒழுகுவோமாயின் நாம் நம் வள்ளற் பெருமானை உள்ளன்போடு வழிபட்டவ ராவோம், வணங்கினவ ராவோம். அப் பெரியாரது பொன்னடிக்குத் தொண்டு பூண்ட தூய்மையராவோம்.

அன்றியும், மெய்யன் பர்கள், இறைவன் திரு முன் சாதிவேற்றுமையில்லை. சமய வேற்றுமையில்லை, செல்வர் வறியர் என்னும் வேற்றுமையில்லை. உயர்ந்தோர். தாழ்ந்தோர் என்னும் வேற்றுமையும் இல்லை. சகலரும் சமானர். ஒன்றே தெய்வம், ஒன்றே குலம், ஒன்றே சமயம் என்றே எண்ணுக என்பதே நந்தம் வள்ளலார் நமக்குக் காட்டிய ருளிய மார்க்கம், அதுவே சமரச சன்மார்க்கம்.

சென்னை இராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க்க சங்கத்தார் திருவொற்றியூரில் திருமடம் ஒன்று தாபித்து, மாதந்தோறும் மகேகர பூசை நடத்தி வருகின்றனர். திருஅருட் பாவை எங்கும் பரவச் செய்கின்றனர். திருவருட்பாவின் சிறப்புக்களையும் உண்மைகளையும் வள்ளலாரது கொள்கைகளையும் சிறுசிறு நூல்களின் வழியே வெளியிடுகின்றனர். இவ்வாறே சமரச சன்மார்க்க சபைகள் தமிழ் நாட்டில் ஆங்காங்கே தோன்றி வள்ளலார் கொள்கைகளை வளர்த்து வருகின்றன. ஆயினும், தலைச் சங்கம் என்றும் கிளைச் சங்கம் என்றும் ஏற்பட்டு ஒற்றுமைப்பட்டு உழைத்து வருமாயின் நன்மை விளையும் என்பது அன்பர் பலர் கொண்டுள்ள கருத்தாகும்.

இவ்வகையில் சென்னையிலுள்ள சபை தலைச்சபையாகவும் தமிழ் நாட்டில் ஆங்காங்கே ஏற்படும் சபைகள் கிளைச் சபைகளாகவும்

f